பக்கம்:தேவநேயம் 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவியுணவும்... பாவாணர் 259 மொச்சையும் அவரையெனப் பட்டதென்றோ , கருத இடந்தரும். கொட்டையவரை யென்று பதார்த்த குண சிந்தாமணி குறித்திருப்பது. ஒரு தனி வகையாகத் தெரியவில்லை . சீர்திருத்தம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, கோழி யவரையை வாளவரை (sword-bean) யென்று குறித்துள்ளது. ஆரால் மீனவரை, ஆனைக்காதவரை, கொழுப்பவரை, சுடலை அவரை முதலிய பெயர்கள் அதிற் குறிக்கப்பெறவில்லை, மேல் நாட்டுத் தமிழறிஞர் தம் அறியாமையால் அவரைக்காய் என்பதன் திரிபான அவரக்க, அமரக்க என்னும் சொற்களையும் அவரையைக் குறிக்கும் தனிச் சொற்களாகக் குறித்துள்ளனர். அவியுணவும் செவியுணவும் மாந்தன் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத காற்று, நீர், உணவு என்னும் மூன்றனுள், முதலது உடல் நலத்திற்கேற்ற இடத்தி லெல்லாம் இருக்குமிடத்திலேயே முயற்சியின்றி இலவசமாகப் பெறக்கூடியது; இடையது பஞ்சமில்லாத காலமெல்லாம் சிறு முயற்சியாற் பெறக்கூடியது; இறுதியதே விளைவுக்கால மெல் லாம் முயற்சியினாலோ, விலைகொடுத்தோ பெறக்கூடிய தாகும். நாகரிக வாழ்க்கைக்கு வேறு பல பொருள்களும் வேண்டு மாயினும், உயிர்வாழ்க்கைக்கு வேண்டியதே இன்றியமையாத தாதலின், மாந்தன் கவலைப்பட்டுத் தேட வேண்டிய முதன்மை யான பொருள் உணவொன்றே. உணவினாலேயே உயிர் உடம்பில் நிற்பதுடன், உடம்பும் உரிய வளர்ச்சியடைகின்றது. உணவின் மாற்றமே உடம்பு. உடம்பின் நன்னிலையே உயிர் நிலை. நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரி யோரீண்டு உடம்பு முயிரும் படைத்திசி னோரே. (புறம்.13) உணவு பெறுதற்குரிய பல்வேறு தொழில்களைப் பயில்வதற்கும், அவற்றைச் செய்தற்கும், உரிய பருவத்தில் மணம் புரிவதற்கும், பின்னர் மக்களைப் பெற்று வளர்த்தற்கும், நீண்ட காலம் உடம்பின் தன்னிலை வேண்டியிருத்தலின், உலக வாழ்க்கையை விரும்புவோரெல்லாம் உடம்பைப் பேணுவது இன்றியமையாத தாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/276&oldid=1431993" இலிருந்து மீள்விக்கப்பட்டது