பக்கம்:தேவநேயம் 1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் அளவைகள் 4 முழம் - ! பாகம் அல்லது தண்டம் 2000 தண்ட ம் - 1 குரோசம் 214 மைல் 4 குரோசம் | யோசனை 712 நாழிகைவழி - 1 காதம் (10 மைல்) குழியளவை வருமாறு 16 சாண் 1 கோல் 18 கோல் 1 குழி 100 குழி 1 மா 240 குழி 1 பாடகம் 20 மா 1 வேலி செய் என்று ஒரு நில அளவு சங்ககாலத்திலிருந்தது. நிலவரியைத் துல்லியமாய் விதித்தற் பொருட்டு, சோழப் பெரு நாடு முழுமையும், முதலாம் இராசராசன் காலத்தில் ஒருமுறையும், முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும், மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது. அவ் வளவையை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான், அவன் கையாண்ட அளவுகோல் உலகளந்த கோல் எனப்பட்டது, எல்லை மாறும்போதெல்லாம் வளநாடுகளும் நாடுகளும் அளக்கப்பெறும். அவற்றை யளக்குங் கோல் இறையிறுக்குங் கோல் எனப்பெறும், குடி தாங்கிக் கோல் என்றும் ஓர் அளவு கோல் முன்காலத்திருந்தது. நிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன என்பது "ஆக இறை யிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரைக் கீழ் நான் குமாவினால் இறை கட்டின காணிக்கடன்" (சோ., பக்58) என்பதனால் விளங்கும். இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52/428,800,000 வேலி, இனி, காலவளவை வருமாறு : 60 நொடி 1 விநாடி 60 விநாடி ! நாழிகை 74 நாழிகை 1 சாமம் 8 சாமம் 1 நாள் 7 நாள் 1 வாரம் 15 நாள் 1 பக்கம் 2 பக்கம் 1 மாதம் 6 மாதம் 1 அயனம் 2 அயனம் 1 ஆண்டு , (ப.த.ஆ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/285&oldid=1432002" இலிருந்து மீள்விக்கப்பட்டது