பக்கம்:தேவநேயம் 1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறமும் கொடையும் பாவாணர் 269 அளி அளி - அலி அள் = கூர்மை, நீர்முள்ளி, அள் - அளகம் = பன்றிமுள். அள் - அளி = கொட்டும் முள்ளுள்ளது, தேனீ. (வ.வ. 81.) அறக்கடன் ஒருவன் கடமையாகச் செய்யவேண்டிய பல வினைகளுள், அறமும் ஒன்றாகும், உயர்திணையைச் சார்ந்த காரணத்தினாலும், உலகம் கடவுளைத் தலைமையாகக் கொண்ட ஒரு மாபெருங் குடும்பம் என்னுங் கருத்தினாலும், ஒவ்வொருவனும் பிறர்க்கு, அவருள்ளும் சிறப்பாக ஏழை எளியவர்க்குத் தன்னால் இயன்ற வரை உதவியும் நன்மையும் செய்தல் வேண்டும். இங்கனம் செய்தற்குக் கடப்பாடு என்று பெயர். கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு (குறள் - 210 என்றார் திருவள்ளுவர். கடப்பாடு என்னும் சொல்லின் முதற்பொருள் கடன் என்பதே. ஒவ்வொருவரும் அறஞ்செய்ய வேண்டுவது கடன் என்னும் கருத் தினால், அச்சொல்லுக்கு ஒப்புரவொழுகல் (உபகாரஞ் செய்தல்) என்பது வழிப் பொருளாய்த் தோன்றிற்று. (சொல். 111) அறத்தொடுநிலை பெற்றோர் கட்டுவிச்சி (குறிகாரி) வேலன் (மந்திரக்காரன்) முதலியோரின் துணைவேண்டும் போதோ, அதற்கு முன்னதாகவோ, காதலி தானாகவேனும் தன் தோழி வாயிலாகவேனும் தன் காதலனைப்பற்றித் தெரிவித்தல். (த.தி.5.) அறமும் கொடையும் அறம்: அறநெறியிற் பொருளீட்டி அப்பொருளால் அறநெறியில் இன்பந் துய்க்க வேண்டும் என்பதை உணர்த்தற்கே, அற நூலார் இம்மைப்பொருள் மூன்றையும் அறம் பொருள் இன்பம் என்னும் இம்முறைப்படுத்திக் கூறினர். ஒவ்வொருவனும் அறநெறியில் தன்தன் தொழிலைச் செய்வதே, அவனவன் பொருளீட்டி இன்பந்துய்க்கும் வழியாகும். அரசன் தொழிலாவது நாடுகாவல். போர்வினையும் நாடுகாவலுட்பட்டதே. அதனால் அக்காலத்து அரசர், பெரும்பாலும், தம் வினைகளிலெல்லாம் அறத்தைக் கடைப்பிடித்தனர். குறளரும் சிந்தரும், அரண்மனையில் மகளிர் உறையும் உவளக மெய்காவலராக அமர்த்தப் பெற்றனர். தேவாரம் பாடும் குருடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/286&oldid=1432003" இலிருந்து மீள்விக்கப்பட்டது