பக்கம்:தேவநேயம் 1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறமும் கொடையும் பாவாணர் 271 புலவர் பாணர் கூத்தர் முதலியோர்க்களித்த குதிரை யானை தேர். என்பவை ஊர்திக்கொடையாகும். மறையோர்க் கவ்வப்போதளித்த ஆவாயிரம் (கோசகஸ்ரம்) விலங்குக்கொடையாகும். அவைக்களத் தலைமைப் புலவர்க்களித்த குடை கொடி சிவிகை முதலிய விருதுகளும், ஆடல்பாடல் அரங்கேறியவர்க்களித்த தலைக்கோலும், வணிகத் தலைவர்க்களித்த எட்டிப்பூவும், படைத் தலைவர்க்களித்த ஏனாதி மோதிரமும், அமைச்சர்க் களித்த காவிதிப் பூவும். சின்னக்கொடையாகும். உழுவித்துண்ணும் வேளாளர்க்களித்த வேள் அரசு என்னும் பட்டங்களும், வணிகர் தலைவர்க்களித்த எட்டிப் பட்டமும், ஆடல்பாடல் அரங்கேறியவர்க்களித்த தலைக்கோற் பட்டமும், அமைச்சர்க்களித்த காவிதிப் பட்டமும், படைத்தலைவர்க் களித்த ஏனாதிப் பட்டமும், பலவகை அரசியலதிகாரிகட்களித்த அரையன் (ராயன்) மாவரையன் (மாராயன்) பேரரையன் விழுப்பேரரையன் மூவேந்த வேளான் முதலிய பட்டங்களும், சிற்றரசர்க்களித்த பிள்ளை மக்கள் நாயனார் என்னும் பட்டங் களும், பெயர்க்கொடையாகும். இனி, அரசர் தம் குடிப்பெயர் களை அமைச்சர் படைத்தலைவர் முதலியோர்க்கும், தம் சிறப்புப் பெயர்களைச் சிற்றரசர்க்கும் பட்டப்பெயராகவும் பெயரடை யாகவும் இடுவதுமுண்டு, சேரன் செங்குட்டுவனின் படைத் தலைவன் வில்லவன்கோதை என்றும், அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சரான மாணிக்கவாசகர் தென்னவன் பிரமராயன் என்றும், மூன்றாங் குலோத்துங்கச் சோழனின் சிற்றரசருள் ஒருவன் குலோத்துங்கச் சோழப் பிருதிகங்கன் என்றும், பெயர்பெற்றிருந்தமை காண்க. அரசியல் வினைஞர், பொருநர் (போர் மறவர்), பொது நல வூழியர், புலவர், கலைஞர், வணிகர், மறையோர், அறச்சாலை, மடம், கோயில் முதலியோர்க்கு அளித்த நிலம் நிலக்கொடையாகும். அது முற்றூட்டு, இறையிலி, இறை நிலம், நிலவிறை ஆகிய நால்வகை நிலைமையிலும்; நிலம் ஊர் நாடு என்னும் மூவகையளவிலும் கொடுக்கப்பட்டது. ஒரு வகை வரியுமில்லாதது முற்றூட்டு, அது உறாவரை, காசு கொள்ளா விறையிலி எனவும் படும். அரசிறைமட்டும் நீங்கியது இறையிலி, இறையிறுக்கும் நிலம் இறைநிலம், நிலத்தில் வரும் இறையைமட்டும் நுகர்வது நிலவிறை, அரசியல் வினைஞர்க்கு, அக்காலத்தில் சம்பளம் உம்பளம் என் னும் இருவகையில் வேலைப்பயன் அளிக்கப்பட்டது. நெல்லாக வேனும் காசாகவேனும் கொடுப்பது சம்பளம்; நிலமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/288&oldid=1432005" இலிருந்து மீள்விக்கப்பட்டது