பக்கம்:தேவநேயம் 1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

272 தேவநேயம் அறமும் கொடையும் கொடுப்பது உம்பளம். உம்பளம் மானியம் எனப்படும். அது நிலையானது; பெரும்பாலும் இறையிலியாயிருப்பது. மானியவகை: அரசியல் வினைஞருள், ஊர்த்தலைவனுக்குக் கொடுப்பது அம்பலமானியம்; ஊர்க்கணக்கனுக்குக் கொடுப்பது கணக்கக்காணி; வெட்டியானுக்குக் கொடுப்பது வெட்டிப்பேறு, அரசியல் வினைஞருள் ஒருசாராரான பொருதருள். படைத் தலைவனுக்குக் கொடுப்பது அமரநாயகம்; போரிற்பட்டவன் மகனுக்கு அல்லது மனைவிக்குக் கொடுப்பது இரத்தக்காணி (இரத்தக் காணிக்கை, இரத்தமானியம், உதிரப்பட்டி), பொதுநலவூழியருள், குடிமக்கட்குக் கொடுப்பது குடிமக்கள் மானியம்; பறையடிப்பவனுக்குக் கொடுப்பது பறைத்துடைவை; உவச்சனுக்குக் கொடுப்பது உவச்சக்காணி; மருத்துவனுக்குக் கொடுப்பது மருத்துவப்பேறு; நச்சுமருத்துவனுக்குக் கொடுப்பது விடகர (விஷ ஹர) போகம்; ஏரியுடைப்பை அடைத்தவனுக்குக் கொடுப்பது ஏரிப்பட்டி இவையெல்லாவற்றிற்கும் பொதுப்பெயர் ஊழியமானியம் என்பது. இவற்றுட் பல, ஊரவையாராற் கொடுக்கப்பட்டவையேனும், அரசவொப்பம் பெற்றவை. வணிகருட் சிறந்த தொண்டு செய்தவனுக்குக் கொடுப்பது எட்டிப் புரவு. புலவர்க்குக் கொடுப்பது புலவர்முற்றூட்டு, கலைஞருள், நட்டுவனுக்குக் கொடுப்பது நட்டுவநிலைக்காணி; கணியனுக்குக் கொடுப்பது கணிமுற்றூட்டு. மறையோர் என்னும் பிராமணருக்குக் கொடுப்பது பிரமகாயம் (பிரமதேயம்), அது தொகுதிப்பட்டவருக்குக் கொடுப்பதும் தனிப்பட்டவர்க்குக் கொடுப்பதும் என இருவகை. அகரப்பற்று, அக்கிரசாலைப்புறம், அக்கிரகார வாடை என்பன தொகுதிப் பட்டவர்க்குரியன. பார்ப்பனர் மட்டும் குடியிருக்கும் இறையிலி நிலம் அகரப்பற்று, பார்ப்பனர் பெரும்பான்மையாகவும் பிறர் சிறுபான்மையாகவும் குடியிருக்கும் இறையிலிநிலம் அக்கிரகார வாடை பார்ப்பனரை உண்பிக்கும் அக்கிரசாலைக்கு விடப்பட்ட மானியம் அக்கிரசாலைப்புறம். வேதவிருத்தி, பட்ட விருத்தி, பாரதப்புறம் முதலியன தனிப்பட்டவர்க்குரியன. சத்திரம், அடிசிற்சாலை (ஊட்டுப்புரை, சோற்றடைப்பு, அன்னசத்திரம்) முதலியவற்றிற்கு விடும் மானியம் சாலைப்புறம் (சாலாபோகம்), அடிசிற்சாலைக்கு மட்டும் விடப்படுவது அடிசிற்புறம். தண்ணீர்ப்பந்தலுக்கு விடப்படுவது தண்ணீர்ப் பட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/289&oldid=1432007" இலிருந்து மீள்விக்கப்பட்டது