பக்கம்:தேவநேயம் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் பாவாணர் நூற் சுருக்கம் (அகரநிரற்படி) 1. இசைத் தமிழ்க் கலம்பகம் மேடையில் பயன்படுத்தத் தக்க பல்வகை இசைத் தமிழ்ப் பாக்களை யுடைய இந்நூல் வழக்கம்போல் பாவாணர் எழுதும் முன்னுரையை உடையதாய் இல்லை. பதிப்புரையும் இல்லை. பிழை திருத்தப்பட்டி நான்கு பக்கங்கள் முகப்பில் உண்டு. நேசமணி யம்மையார் நினைவு வெளியீடு-1 என மூன்று உருபா விலையில் 248 பக்க அளவில் வெளி வந்துளது. இதில் இடம் பெற்றுள்ள இசைப் பாடல்கள் 303 ஆகும். வெளிவந்த ஆண்டு 1966, குறியீட்டு விளக்கம், பாட்டுறுப்புப் பெயர்கள், தாளப் பெயர்கள் பற்றிக் கூறுகின்றது. பல்லவி, துணைப்பல்லவி, உருவடி (சரணம்) உரைப்பாட்டு (தொகையரா) என்பவை பாட்டுறுப்பு. ஒற்றை (ஏகம்), முன்னை (ஆதி), ஈரொற்று (ரூபகம்) மூவொற்று (சம்பை) முப்புடை (திரிபுடை இணையொற்று (சாப்பு) என்பன தாளப் பெயர்கள். இவற்றை முறையே மூன்றெண்தாளம், எட்டெண்தாளம், ஈரொற்றுவாரம், ஐந்தெண்சார்பு, ஏழெண்சார்பு, எனக் குறிப்பார் இசையறிஞர் குடந்தை சுந்தரேசனார் என்னும் அழகவுடையார்” என்கிறார், ஓராணை மொழியைப் பாவாணர் பாயிரத்தில் கூறுகிறார். அது, “பாடற்குழாம் ஒன்றேற் படுத்துக ஊர் தொறும்: குறித்த நாட்களில் தெருவெலாம் பாடிப் பராவுக” என்பது. ஆரிய ஞாட்பின் (போரின்) அருந்தமிழ் மீட்க ஒரு மீட்பன் துணை எனக் காப்பும், இன்னிசை யாழ்வல்லான், மன்னார்குடி இராசகோபாலனுக்கு இசையாசிரிய வணக்கமும் பாடி, கடவுள் வணக்கம் முதலாக இசைப்பா இசைக்கிறார். நூல் தொடங்கியும் கடவுள் தொடர்பாக நான்கு பாடல் களை இசைக்கிறார். பின்னர் இசையின்பம், தமிழன் பள்ளி எழுச்சி, பழந்தமிழன் சிறப்பு முதலாகத் தொடர்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/29&oldid=1431210" இலிருந்து மீள்விக்கப்பட்டது