பக்கம்:தேவநேயம் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் ஒவ்வொரு பாடற்கும் மெட்டு, பண், தாளம் என்பவற்றைப் பெரும்பாலும் சுட்டுகிறார். இசைந்த பண்ணிற் பாடுக என்றும் வைக்கிறார். பொதுவகையாலும் சிறப்பு வகையாலும் இசைபாடுவார் அனைவர்க்கும் தகுமாறு இவ்விசைப் பாக்கள் இருக்கவேண்டும் என்பதால் மொழிவிலக்கின்றி, "பசனை செய்வோம் கண்ணன் நாமம்" "மாசில் வீணையும்” "லம்போதரா லகுமிகரா" "ரகுபதி ராகவராசாராம்" என்பன போல மெட்டுகள் சுட்டிக்காட்டுகிறார். பாவாணர் இசைப்புலமை விளக்கமாவதொடு, அவ்விசை பரப்புதல் வேட்கையையும் வெளிப்படுத்துகிறது இது. பாவாணர் ஆய்வுத் திறத்தால் நூல்களாகவும் கட்டுரைக ளாகவும் வடித்தவற்றையெல்லாம் இன்னிசையால் தெருத்தோறும் பரவச் செய்ய முயன்ற முயற்சி இசைப்பாத் தலைப்புகளாலும், அவற்றின் பொருளாலும் தெள்ளிதின் விளங்கும். தமிழ் வரலாறு, முதல்தாய்மொழி, வடமொழி தமிழினின்று கடன் கொண்டவை, தமிழன் தானே கெட்டமை, தமிழ்த் திருமணம், பழந்தமிழே திரவிடத்தாய், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு, தமிழ்கடன் கொண்டு வளராது, வண்ணனை மொழியியலின் வழுநிலை, என் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பணி; இத் தலைப்புகளைப் பார்த்த அளவிலேயே பாவாணர் படைத்த நூற்பெயர்கள் பளிச்சிடும். பிறதலைப்புகளோ பாவாணர் நூல்களில் தேங்கிக் கிடக்கும் ஆய்பொருள் வளம் எளிதில் கையில் கனிபோல் விளங்கிக் கிடக்கும்வகை புலப்படும். தென்சொல் வளம் (20) தமிழின் பதினாறு தன்மை (16) என்பன போல்வன அடைமொழி பயிலா அடுக்கின் அருமை வாய்ந்தவை. யார் யார் எவ்வெப்பா வல்லார்? என்பது (30) பழமையொடு புதுமை நலம் செறிந்த புகழ்மையது. வடமொழியால் தமிழுக்கு வந்த கேடு (44) வடமொழியால் தமிழ் கெட்ட வகைகள் (45) என்பன வடமொழி வரலாறு மட்டுமன்றிப் பாவாணர் தம் நூல்களை யெல்லாம் ஒட்டு மொத்தமாகத் தழுவியுரைக்கும் பிழிவிசையாகும். தமிழ் அயன்மொழியால் கெடும் வகையை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/30&oldid=1431211" இலிருந்து மீள்விக்கப்பட்டது