பக்கம்:தேவநேயம் 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் "நோய் இருக்கையில் வியாதி வந்தது வியாதி வந்தபின் சீக்கு வந்தது. சீக்கிருக்கிவே பீமார் வந்திடும் பீமார் வந்திட ஏமாறாதீர் எனப் பளிச்சிடக் காட்டுகிறார் பாவாணர் (51), இயல் இசை நாடகத் தமிழின் இயற்கையமைதியைக் கிளி, குயில், மயில் இயலால் காட்டுதல் சிறந்து விளங்குகின்றது(69), யானை தன்னைக் கட்டும் தொடரியை (சங்கிலியை)த் தானே எடுத்துத் தருதல் போல் மானங்கெட்ட தமிழன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டான் என்பது எள்ளல் அன்று நோவு (94},

  • ஆங்கிலம் தீயதே அன்று” என்பது உண்மை . ஆனால் தமிழ்த்தாயைக் கொல்லியாக ஆங்கில வழிப்பள்ளிளை உருவாக்கிய கொள்ளையர் உள்ளம் தீமையே உருவாயது தானே (98),

அன்று வந்ததும் அதே நிலா என்ற மெட்டில் "அன்றிருந்ததும் அயன்மொழி இன்று வந்ததும் அயன்மொழி என்றுதான் இங்குத் தமிழ்மொழி ஏத்துநாட்டினை வாழ்த்து மொழி என மொழி விடுதலை இன்மையை எளிமையாய்ச் சிந்திக்க வைக்கிறார் (150), தொண்டர் படைச் செலவு நடைக்கு 'இடம்வலம் இடம் வலம்' என்று தடம் காட்டுகிறார் (205), "தமிழரென் றிருப்போரெல்லாரும் - நல்ல தமிழன்பரோ நெஞ்சைத் தடவிப்பாரும்” தல்லவினா இல்லையா? (246) பிராமணர் தமிழன்பராதல் நாட்டு நலம் என்பதை, "தமிழரும் ஆரியரும் சமநிலை யுணர்வோடு தமிழையே தாங்க வேண்டும் - நல்ல தங்கமே தமிழகம் ஓங்க வேண்டும்” என்கிறார். பாவாணர் ஒப்புரவுள்ளமும் மாந்த நேயமும் இருதாளாய் நடையிடும் மாட்சி இது (248, 249) "எளிதாகப் பேசுமொழி தமிழ்பாப்பா-மூச் சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா பேசு பாட்டா - தமிழ் பேசுபாட்டா" என்பது மழலைப் பாவாணர் மொழி (251),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/31&oldid=1431212" இலிருந்து மீள்விக்கப்பட்டது