பக்கம்:தேவநேயம் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 15 "எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம்” "பொல்லாப் பகையும் பசியும் பிணியும் இல்லாமல் எங்கும் நன்கனம். (303) என உலகநேயராக இசைத்தமிழ்க் கலம்பகத்தை இனிக்க முடிக்கிறார் தேவநேயர். 2. இசையரங்கு இன்னிசைக் கோவை பாவாணரால் இயற்றப்பட்டதும், முகவை மாவட்டம் பறம்புக் குடியில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் வேழத்திருமகள் என்னும் கசலட்சுமியாரால் பாடப்பட்டதும் ஆகிய இசைப்பாடல் சுவடியே இசையரங்கு இன்னிசைக் கோவை என்பதாம். 31 பக்கங்களையுடைய இச்சுவடியில் 34 இசைப் பாடல்கள் இடம்பெற்றுள. அந்தாள் விலை 50 காசுகள். இருபது பாடல்களுக்கு இசைமெட்டுகள் சுட்டப்பட்டுள. ஒரே ஒரு பாடலை (21) இசைந்த மெட்டில் பாடுக என்ற குறிப்புளது. எஞ்சிய பாடல்களுக்குப் பண்ணும் தாளமும் குறிக்கப்பட்டுள. 'ஆதி' முன்னை எனவும், 'மோகனம்', முல்லை எனவும் 'சாப்பு' இரட்டை எனவும் 'ரூபகம்' ஈரொற்று எனவும் பண்ணும் தாளமும் தமிழாக்கம் பெற்றுள. தமிழே முதல் தாய்மொழி என்பதைப் பெற்றோர் பெயர் (அம்மா, அப்பா) உலகமுழுவதும் தமிழ்வழிப்பட்டதாகவே இருப்பது கொண்டு நிறுவுதல் இணையற்ற சான்றாம் (2) "தமிழா உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே” என்றும் பாடல் முற்றும் இயைபு நயம் சொட்டச் சொட்டப் பழந்தமிழன் பெருமை சொல்கின்றது (4) திருக்குறளின் சிறப்பு முப்பாடல்களில் முழங்குகின்றது (5-7) நக்கீரன், பரிதிமாற்கலைஞன், மறைமலையடிகள் எனத் தமிழ்க் காவலர் புகழ் தொடர்கின்றது (8-10) தமிழ்ப்பெயர் தாங்காதவரைத் தமிழரெனவும் தகுமோ என்றும் (11) தமிழ் என்பதே தனித்தமிழ்தான், பால் தருபவர் தண்ணீரொடு கலந்ததால்தான் கலப்புப் பால் ஆயது என்றும் (12) குறிக்கிறார். "சுரையாழ அம்மி மிதப்ப” என்னும் மொழிமாற்றுப் பொருள்கோள் எடுத்துக்காட்டைத் தமிழ்நாட்டின் நிலைமைக்கு எடுத்துக்காட்டாக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/32&oldid=1431213" இலிருந்து மீள்விக்கப்பட்டது