பக்கம்:தேவநேயம் 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

284 தேவநேயம் ஆகாரச் கட்டு > (நாங்கர்) > ஞாங்கர், ஆண்டு , Cf.E. yon. yond, yonder, A.S. geond, Ger. jener, that, root ya. ஆது - அது, அதா, அதோ, அதோளி, அது - அதன் (தெ). அம்: அந்து, அந்த, அந்தா, ஒ.நோ. உம் > உந்து. அம்மை = சேய்மையிற் சென்றுவிட்ட முற்பிறப்பு. ஆ - அவ்: (அவள்), அவண், அவள் = அவ்விடம். ஆன் > அவன்; ஆம் > அவம். அவன், அவள், அவர், அவ - அவை. அல்: அல் + து = அஃது, ஒ.நோ, பல் + து = பஃது. அல் + து = அன்று , ஒ.நோ. நல் + து = நன்று , லகரவீற்றுச்சுட்டு வினாவடிகளும் உண்டு என்பதை அல ஏலா என்னும் தெலுங்குச் சொற்களாலும் அல்லி இல்லி எல்லி என்னும் கருநடச் சொற்களாலும் உணர்க. Cf. L. ille, he. Ar. al. the. ஆன் - அன் : அன்ன, அன்னா (சுட்டு); அன்ன (such) - சுட்டாச் சுட்டு, அன்ன (உவமையுருபு), அன்னது, அற்று. அனை (சுட்டு), அனை + து = அனைத்து, அனை, அனைய (உவமை, அகம் = அவ்வுலகம், வீடு (heaven, bliss), வீடு போன்ற தங்கிடம், வீட்டை நுகரும் உள்ளம், உள்ளிடம், இடம். அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு, (குறள். 247) என்னுங் குறளில், அவ்வுலகம் இவ்வுலகம் என்பன முறையே சேய்மையும் அண்மையும் பற்றி வீட்டையும் ஞாலத்தையுங் குறித்தல் காண்க , ஏசுமீட்பர் தம் மாணவரை நோக்கிப் பேரின்ப வீடு உங்கள் உள்ளத்திலிருக்கிறது என்றார். பேரின்ப வுலகிற்கும் இவ்வுலக இருப்பிடத்திற்கும் வீடு என்பது பொதுப் பெயரா யிருத்தலை நோக்குக. உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்றார் திருமூலர். அப்பால் >Gk. apo; L. ap. ab, abs, a; Sans. apa; Ger. ab; E. ab, abs, a, off, of, away. அப்போது என்னுஞ் சொல்லே அப்ப என்று திரிதலால், அப்பால் என்பது அப்ப என்று திரிவது வியப்பன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/301&oldid=1432019" இலிருந்து மீள்விக்கப்பட்டது