பக்கம்:தேவநேயம் 1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆகாரச் கட்டு பாவாணர் 285 (2) படர்க்கைப் பெயர் : படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் சேய்மைப் பொருள்களைக் குறிப்பனவாதலின், சேய்மைச்சுட்டினின்று படர்க்கைப் பெயர்கள் தோன்றின. ஆன் - தான் (ஒருமை) = அவன், அவள், அது. ஆம் - தாம் (பன்மை ) = அவர் அவை. Cf. Sans. tat; A.S. thoet; E. that; Ger. das, dasz; Gk. te; (31.) A.S.thas'; E.those (pl.) தான் என்னும் பெயரே தன் என்று குறுகிப் பின்பு ஆரிய மொழிகளில் தகரவீறாய்த் திரிந்ததென்க. ஒப்பு நோக்க : திருமான் > ஸ்ரீமத்; நுனி - நுதி - துதி. த - ச போலி. எ-டு: மாதம் - மாசம்; பித்தன் - பிச்சன், ஆங்கிலத்திலுள்ள than என்னும் ஒப்பீட்டிடைச்சொல், தன்னின் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபாயிருக்கலாம். தன்னின் = அதனின். "கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி” என்பதை நோக்குக. A.S. thanne; Ger. damn; E.than; from stem of The. அக்கரை என்னும் சொல் ஒரு நீர்நிலையின் மறுபக்கத்தை அல்லது எதிர்ப்பக்கத்தைக் காட்டுவது போல், அப்பால் அப்புறம் என்னும் சொற்களும் ஒரு பொருளின் மறு அல்லது பின்புறத்தைக்காட்டி, அதன்பின் காலப்பின்மை யுணர்த்தும் இடைச் சொற்களாயின. அகல் = சேய்மையிற் செல், நீங்கு, விரி. ஒ.நோ, படர் = செல், விரி. அகல் - ஆல் - ஆலம் (மரம்), (3) மிசைமைக்கருத்து : சேய்மை ஒரு வகையில் மிசைமை போலுதலாலும், மேட்டினடியில் நிற்கும்போது சேய்மை மிசைமையாயிருத்தலாலும், சேய்மைச் சுட்டில் மிசைமைக் கருத்துத் தோன்றிற்று. அண் = மேல்; அண்ணம் = மேல்வாய்; அண்ணல் = மேலானவன், அரசன்; அண்ணன் - மூத்தோன்; அண்ணாவி = ஆசிரியன்; அண்ணி = அண்ணன் மனைவி; அண்ணா = மேல் நோக்கு; அணர் = மேனோக்கிச்செல், Gk. ana, an, up; Goth, ana; E, on. (4) செலவுக்கருத்தும் பிறகருத்தும்: அல் - சேய்மைப்படு, அசை, செல், வருந்து, சுருங்கு, தங்கு, நீங்கு, முடிவடை விரி: ஒ.நோ. ஏ " இய - இயங்கு = அசை, செல். செல்லல் = துன்பம். ஒருவர் செல்லுதவாவது சேய்மைப்படுதல்; செல்வதினால் உடம்பிற்கு அசைவும் அதனால் வருத்தமும் பிறக்கும்; செல்லச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/302&oldid=1432020" இலிருந்து மீள்விக்கப்பட்டது