பக்கம்:தேவநேயம் 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

285 தேவநேயம் ஆகாரச் கட்டு செல்ல உடம்பு சுருங்கித்தோன்றும்; இராவானவுடன் ஓரிடத்தில் தங்கநேரும்; செல்லுதல் ஓரிடத்தினின்று நீங்குதலாகும்; நீக்கமே முடிவு; ஒரு பொருளின் விளிம்பு நீங்குவது விரிதல். அல்லாடு = அலை, வருந்து; அல்லா = வருத்தம்; அல்லல் = வருத்தம், துன்பம்; அலத்தல் = வருந்தல்; அலக்கழி = வருத்து; அலம் = துன்பம்; அலக்கண் = துன்பம்; அலம்வா = அலமா அலமருதல் = வருந்துதல்; அலவு = வருந்து; அல் == அலு; அலுத்தல் = அசைதல், களைத்தல்; அலு + அல் = அலுவல் = வருந்திச் செய்யும் வேலை, வேலை; அலு = அலுங்கு; அலுங்குதல் = அசைதல்; அலுக்கு = அசைப்பு, இசையசைப்பு (கமகம்). அல் = அல = அலை, அலைதல் = அசைதல், பலவிடஞ் செல்லல், வருந்துதல்; அலை = இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் நீர்த்திரை. அலைக்கழி = வருத்து. அலை - அசை. அல் - ஆல். ஆலுதல் = ஆடுதல். ஆலத்தி - ஆளத்தி = விளக்கை வட்டமிட்டு ஆட்டுதல், இசையை வட்டமிட்டு ஆட்டுதல்போல் வளர்த்தல்; ஆல் - ஆலு - ஆடு, ஆடுதல் = அசைதல், விளையாடுதல், கூத்தாடுதல், ஆடுவது ஆடை அசைத்தல் = அசைத்து உடுத்துதல், "புலித்தோலை அரைக்கசைத்து" என்னுந் தேவாரத் தொடரை நோக்குக. அல் - அல்கு, அல்குதல் = சுருங்குதல், அல்கு - அஃகு, அஃகுதல் = சுருங்குதல், நுட்பமாதல், கூராதல், எ-டு: "அஃகிய இ உ” "அஃகியகன்ற அறிவென்னாம்”. L.acuo, to sharpen, from root ak. sharp, E. acute, L. acus, a needle, E.L. acument, sharpness, quickness of perception. E. acme, Gk. akme - ake, a point. அல்கு - அல்குல் = சுருங்கிய இடை, இடையின் கீழ்ப்பக்கம், அல்கு * அலகு, கூரிய பல பொருள்கள் அலகுப்பெயர் பெற்றன. அவை கத்தி, பறவை மூக்கு, இலை, நெற்கதிர், நெல் முதலியன. பறவை மூக்கிற்கொத்த கன்னமும் அலகெனப்பட்டது. அலகு - அலக்கு = இலை. அலக்கு - இலக்கு - இலை; அலம் = கூரிய கலப்பைக்கொழு கலப்பை . | அல்கு - அஃகு - அஃகம் - நெல், கூலம் (தானியம்). அஃகு - அக்கு அக்கம் = கூலம், விதை, மணி. உருத்திர + அக்கம் = உருத்திராக்கம் = சிவமணி; அல் - அல்கு; அல்குதல் = தங்குதல்; அல்குநர் = தங்குபவர், வசிப்பவர்; அல் - அல்கு = தங்கும் இராக்காலம், இரா; அல் + அவன் = அல்லவன் - அலவன் = இரவில் தோன்றும் நிலா, இரவில் வெளியேறும் நண்டு, இனி குறட்டின் அலகுபோற் கௌவுகின்ற காலையுடையது நண்டு என்றுமாம். அலவு - அலகு அல் - அறு; அறுதல் = நீங்குதல், ஒடிதல்; அறுதி = முடிவு. அர் என்னும் ஒலிக்குறிப்பினின்று தோன்றிய அறு (cut) என்னுஞ் சொல்வேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/303&oldid=1432021" இலிருந்து மீள்விக்கப்பட்டது