பக்கம்:தேவநேயம் 1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆங்கிலராட்சி பாவாணர் 287 அல் - அலர் - மலர். சேய்மைப்படுவதால் விரிதல் உண்டாகும். ஒ.நோ. அகல் = செல், விரி; படர் = செல், விரி; ஒரு பொருள் முழுதும் ஓரிடத்தினின்று செல்லுதல் நீங்குதலாம்; அதன் மையம் நிற்க மற்றப் பகுதிகள் மட்டும் இடம் பெயர்தல் விரிதலாம். மலர் - மல்லா, மல்லாத்தல் = மலர்ந்து மேனோக்கிப்படுத்தல். மல்லா x குப்புறு; குப்புறு = குவி, கீழ்நோக்கிப்படு. அல் - அல - அலசு, அலசுதல் = அசைத்தல், அசைத்துக்கழுவுதல், அலைதல், வருந்தல், நீங்கியிருத்தல்; அலசடி = வருத்தம்; அலசு - அலசல் = இழை நீங்கியிருக்கும் ஆடை, அலவு - அலவல் = அலசல், கற்பின்மை (கட்டின்மை ); அல் - அல - அலம் - அலம்பு. அலம்புதல் = அசைத்தல், அசைத்துக் கழுவுதல், அலம்பு - அலப்பு: அலப்புதல் = வாயசைத்தல், பிதற்றல். அலட்டு = அசை, வருத்து, பிதற்று. அலதி, அலக்கு - நீக்கம், வேறு. ஒ.நோ. விள் - வில் - விலு - விறு - வீறு - வேறு = விலகினது, வேறானது . அலதி - அலாதி. அலக்கு " அலாக்கு, இத்தமிழ்ச் சொற்களே இந்தியில் வழங்குகின்றன. 'நான் அலாதி', 'அவனை அலாக்காய்த் தூக்கிக்கொண்டு போய்விட்டான்' என்பன உலக வழக்கு, அலவை - பிதற்றல், வாயாடிப் பெண், கற்பின்மை . (சு.வி.) ஆங்கிலராட்சி ஆங்கிலராட்சி 18ஆம் நூற்றாண்டிடையில் தோன்றி, இவ்விருப்ப தாம் நூற்றாண்டிடையில் நீங்கியது. அரசினர் அலுவலகங்களி லும், பெருஞ்சாலைகளிலும், பொதுவிடங்களிலும், புகை வண்டிகளிலும், மின்வண்டிகளிலும், உயர்கல்வி நிலையங்களிலும், வகுப்பு வேற்றுமை நீக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிற்று. எல்லாத் துறையிலும், பொய்யும் புரட்டும் கட்டுங் கதையுமான ஆரியத் தொல்கதை (புராண) முறைக் கல்வியின்றி, உண்மையும் அகக்கரண வாற்றலை வளர்ப்பதும் அறியாமையையும் அடிமைத்தனத்தையும் அறவே அகற்றுவதுமான, அறிவியற்கல்வி புகட்டப்பட்டது. கல்வித் திறமை மிக்க அனைவர்க்கும் வகுப்பு வேற்றுமையின்றிப் படிப்புதவி (Scholar-ship) யளிக்கப்பட்டது. இந்தியா முழுதும் படிப்படியாக ஒரு பேரரைய ஆட்சிக்குட் கொண்டுவரப்பட்டது. ஆங்கிலராட்சி யிருந்த, இலங்கை காழகம் (பர்மா) மலையா தென்னாப்பிரிக்கா முதலிய பல வெளிநாடுகளிலும், இந்தியர் குடியேறித் தமக்கேற்ற தொழிலும் அலுவலும் பெற்று ஏந்தாக வாழ்ந்தனர். ஆங்கிலவரசு மதத்துறையில் தலையிடவேயில்லை. குல மத கட்சியின வேறு பாடின்றி, எளியார்க்கும் வலியார்க்கும் ஏழைகட்கும் செல்வர்க்கும், ஒரே நடுநிலை நயன்மை (நீதி) வழங்கப்பட்டது. இதனால், ஆங்கிலராட்சி தேர்மையையும் புதுச்சேரி காரைக்கால் தெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/304&oldid=1432022" இலிருந்து மீள்விக்கப்பட்டது