பக்கம்:தேவநேயம் 1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

288 தேவநேயம் ஆங்கிலராட்சி நேர்மையையும் ஒருங்கு நோக்கி, “பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும்,” என்று பழமொழியாக வழங்குமாறு, பொதுமக்கள் புகழ்ந்து பாராட்டினர். குமுகாய இன்ப வாழ்க்கைக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாயிருந்த, உடன்கட்டை யேறல், செடிற்குத்தல் (Hook-swinging), குழந்தை மணம், நரக் காவு (human sacrifice) முதலிய குருட்டுப் பழக்க வழக்கங்களும்; தக்கர், பிண்டாரியர், தீவட்டிக் கொள்ளைக்காரர் முதலிய கொடிய சுயவர் கூட்டங்களும்; அறவே ஒழிக்கப்பட்டன. அருமையான அஞ்சல் துறையும், குறைந்த செலவில் விரைந்து வழிச்செல்லும் இருப்புப் பாதைகளும் அழகிய மாடமாளிகைகளும் மலைநகர் களும், இந்தியாவெங்கும் அமைந்தன. உயிருக்கும் பொருட்கும் சேதமின்றி அமைதியாக வாழுமாறு சிறந்த ஊர் காவலொழுங்கும், கலகமும் போருங் கனவிலுங் காணாவாறு மாபெரும் படை யமைப்பும், ஏற்பட்டன. எல்லாத் திணைக்களங்களிலும் (departments), இந்தியர் தத்தம் கல்விக்கும் திறமைக்கும் தக்கவாறு பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப் பெற்றனர். இந்தியா முழுதும் ஒன்றுபட்டு நாளடைவில் தன்னாட்சி பெறுமாறு, இந்தியத் தேசியப் பேராயம் (Indian National Congress) கியூம் (hume) என்னும் ஆங்கிலப் பெருமகனாரால் 1885-இல் தோற்றுவிக்கப் பெற்றது. அதன் பயனாக, பேராயத் தலைவர்கள், ஆங்கிலர் நேரடியாட்சி மண்டலங்களில் மட்டுமன்றி, எல்லா உள்நாட்டு மன்னர் நாடுகளுள்ளும் உரிமையொடும் பாதுகாப்பொடும் புகுந்து, விடுதலைப் போராட்டத்திற்கு விதைகளை வாரியிறைத்து வந்தனர். இறுதியில், 1947ஆம் ஆண்டு முழு வெற்றியும் பெற்றனர். தந்தை மகனிடத்திற் சொத்தையும், அரசன் இளவரசனிடத்தில் நாட்டையும், தகுந்த பருவத்தில் ஒப்படைப்பதுபோல், ஆங்கிலரும் பேராயத் தலைவரிடம் இந்தியாவை ஒப்படைத்துவிட்டு, அமைதியாய் அகன்றனர். அதனாற் பிரெஞ்சியரும் போர்த்துக் கீசியரும் சற்றுப் பிந்தி இந்தியாவை விட்டு நீங்க நேர்ந்தது. ஆங்கிலருக்கும் பிராமணருக்கும் வேற்றுமை பிராமணர் (!) வாணிகத்திற்கு வேண்டும் கையுங் காலுமாக வந்தனர். பொருளொடும், பாது காப்பிற்கு வேண்டிய படையொடும், ஆட்சிக் கேற்ற அறிவொடும், வந்தனர், ஆங்கிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/305&oldid=1432023" இலிருந்து மீள்விக்கப்பட்டது