பக்கம்:தேவநேயம் 1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

300 தேவநேயம் ஆட்டை கைவிட்ட ஒண்பொருள் கைவர வில்லென்பார் மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா மடம்பட்ட மானோக்கின் மாமயிலன்னாய்! கடம் பெற்றான் பெற்றான் குடம் என்னும் பழமொழிச் செய்யுளாலும் (57) அறியப்படும். இம்முறை பிற்காலத்துக் கைவிடப்பட்டது. வழக்குக்கள், உரிமை வழக்கு (Civil case) குற்ற வழக்கு (Criminal case) என இக்காலத்திற் பிரிக்கப்பட்டிருப்பதுபோல் அக் காலத்திற் பிரிக்கப்படவில்லை. இரு வகை வழக்குக்களும் எல்லா அறமன்றங் களிலும் தீர்க்கப்பட்டன. படைத்தலைவன் செயல் : ஆங்காங்கு அவ்வப்போது நடக்குங் கலகங்களையும் கொள்ளைகளையும், தானாகவும் தன் துணை வரைக் கொண்டும் அடக்கிவைப்பது, படைத்தலைவன் செய லாகும். (ப.தஆ. ஆட்டை ஒரு விளையாட்டை ஒரு முறை ஆடி முடிப்பது ஓர் ஆட்டை எனப்ப டும். (த.வி.3.) ஆடாதொடை ஆடாதோடை - ஆட்டாருஷ - ஆடு தின்னாப்பாளை ஆடும் ஆவும் (மாடும்) தொடாத செடி என்று தமிழிற் சொற் பொருட் காரணங் காட்டுவர் (வ.வ.83) ஆடு- (ஏடு) ஏட முழுத்தல் = திரளுதல். முழு முழா = திரண்டமுரசு, முழா-முழவு - முழவம். முழா-மிழா = திரண்ட ஆண்மான். ஒ.நோ.முடுக்கு மிடுக்கு முண்டு - மிண்டு முறை - மிறை= வளைவு. மிழா - மேழம் = திரண்ட செம்மறிக்கடா, மேழம் - மேழகம் = செம்மறிக்கடா. வெம்பரி மேழகமேற்றி (சீவக. 522). மேழம் - மேடம் = செம்மறிக்கடா, மேடவோரை (பிங்.). மேழகம் - மேடகம் = செம்மறிக்கடா, மேடவோரை. மேழகம் - ஏழகம் = செம்மறிக்கடா, ஆடு (சூடா.) ஏழகம் - ஏடகம் - ஏடு - யாடு = ஆடு. யாடுங் குதிரையுங் நவ்வியும் உழையும் (தொல். 1511

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/317&oldid=1432036" இலிருந்து மீள்விக்கப்பட்டது