பக்கம்:தேவநேயம் 1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் யாடு - ஆடு, ம. ஆடு, க. ஆடு, து. ஏடு. மேடம் - மேஷ மேடகம் - மேஷிகா ஏழகம் - ஏலக ஏடகம் ஏடக ஏடு - ஏட (வ.வ.82-83.) ஆடு அடித்தல் புலால் உண்பவர் ஆடு கோழி முதலிய உயிர் (பிராணிகளைக் கொல்வதை ஆடு கொல்லுதல் கோழி கொல்லுதல் என்னாது ஆடடித்தல் கோழியடித்தல் எனக் கூறும் வழக்கு, மக்கள் குறிஞ்சி நிலையில் விலங்குகளையும் பறவைகளையும் கல்லாலும் வணரி (வளைதடி) யாலும் அடித்துக் கொன்றதை நினைப்பூட்டும். (சொல். 19) ஆண் பெண் இயல்பு ஆண்மையுள்ளவன் ஆண்; பெண்மையுள்ளவள் பெண். ஆண்மை - மறம் ; பெண்மை விரும்பப்படும் தன்மை. நெறிப்படக் கருதிய கருத்துக்களையெல்லாம் வெளியிடுதலும், இருளுக்கும் பேய்க்கும் அஞ்சாமையும், உயிர்க்கிறுதி வரினும் ஒழுக்கம் தப்பாமையும், பற்றலரைக் கண்டால் பணியாது பொருதிறத்தலும், இடுக்கண் வருங்கால் தகுதலும், ஆண்மையாம்; முகத்தழகோடு அகத்தழகும் உடைமையும் ஆணவமின்றி யமைந்திருத்தலும், கல்வியறிவு நிரம்பியிருத்தலும், நல்ல கணவனுக்கு அடங்கி நடத்தலும் பெண்மையாம். (சொல் 105) ஆண்மை ஆண்மை ஆளுந்தன்மை . ஆளுதல் பயன்படுத்துதல். (குறள் 614) ஆணவம் - ஆணவ ஆண் - ஆணவம் = ஆண்மை , செருக்கு. மானியர் வில்லியம்சு அகரமுதலி, ஆணவ என்னும் சொல்லை அணு என்பதினின்று திரித்து நுண்மை அல்லது மிகச் சிறுமை என்று மூலப்பொருள் கூறுகின்றது. (வ.வ.83) ஆணி' ஆணி - ஆணி (இ.வே.) ஆம் - ஆழி - ஆணி = ஆழ்ந்திறங்குவது, இருப்பாணி, மரவாணி, ஆணி போல் கூரானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/318&oldid=1432038" இலிருந்து மீள்விக்கப்பட்டது