பக்கம்:தேவநேயம் 1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

302 தேவநேயம் ஆத்திரேலிய... ஆணிக்குருத்து = அடிக்குருத்து, ஆணிவேர் = அடிவேர். ஆணி = அடிப்படை நிலைக்களம், தாங்கல். ஆணியா யுலகுக் கெல்லாம் கம்பரா, கடறாவு, 27). ஆணிக்கொள்ளுதல் = ஊன்றிக் கொள்ளுதல், ழ - ண, போலி. ஒ.நோ. தழல் - தணல், நிழல் - நிணல், கால்டுவெலார் பொருந்துதல் என்னும் அடிப்படைப் பொருள் கொண்டு, அண் என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். வடமொழியார், ஊசிமுனை, கழுமுனை, அச்சாணி, முகக்கோற் குச்சு, வீட்டுமூலை, எல்லை என்று வடமொழி யகரமுதலியிற் பொருள் கூறப்பட்டுள்ள அணி என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்ட விரும்புவர். அது ஆணி என்பதன் குறுக்கமே. முனைப்பொருள் கொள்ளினும், அள் (கூர்மை) என்னும் தென் சொல்லே ஆணிவேராம். - வ.வ.84. ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை (1) சகர வேறுபாடுகளும் மூச்சொலிகளு மில்லாமை. (2) பின்னொட்டுச் சொற்களாலேயே பெரும்பாலும் புதுச்சொற்கள் ஆக்கப்படல், ஆத்திரேலியா மொழிகளில் உயர்திணைப் பெயர்களும் அஃறிணைப் பெயர்களும் வேறுபடுத்தப்படாமை. முதுபழந் தமிழிலும் இங்ஙனமே யிருந்தது. கா ; மண்வெட்டி, விறகுவெட்டி சலிப்பான் (சல்லடை), (4) 'அர்' பன்மையீறா யிருத்தல். தமிழர், முண்டர், நாகர், ஆத்திரேலியர் என்பவர் பண்டு ஓரினத் தாராயிருந்ததாகத் தெரிகின்றது. இலங்கையில் பண்டு வழங்கியது தமிழென்றும், ஈழநாட்டர சர்க்கு முடிநாகர் என்ற பேர் இருந்ததென்றும், முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள் 'செந்தமிழ்'ச் சுவடிகையில் (Magazine) எழுதி யிருப்பது பொருத்தமானதே. ஆத்திரேலியர் திராவிடரைப் பலவகையில் ஒத்திருப்பதாக மாந்தனூலார் கூறுகின்றனர். (ஒ.மொ.) ஆதி ஆதி என்பது தொடக்கம் என்று பொருள்படுவது. பெண்பாற் பெயராயின் ஆதன் என்பதன் பெண்பால் வடிவாம். அது தூய தென்சொல், (திம.பின்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/319&oldid=1432039" இலிருந்து மீள்விக்கப்பட்டது