பக்கம்:தேவநேயம் 1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்தம் பாவாணர் ஆம் ஆம்'- ஆம் ஆ - ஆகு - ஆகும் - ஆம் (Yes) ம. ஆம். தெ. அவுனு 'ஆம்' வடமொழியில் மூவமில்லா உடன்பாட்டிடைச் சொல். ஆம் - ஆப் அம் - ஆம் = நீர். “ஆமிழி யணிமலை ” (கலித். 48), (வ.வ84) ஆமணக்கு ஆமணக்கு - ஆமண்ட "ஆமணக்கு நட்டால் ஆச்சா வாகுமா?” என்பது பழமொழி. சிற்றாமணக்கு, காட்டாமணக்கு (ஆதளை) என்பன ஆமணக்கு, வகைகள் .. வடசொல் அமண்ட, மண்ட என்னும் வடிவுங் கொள்ளும். (வ.வ84) ஆய்தம் ஆய்த எழுத்து வகைமை எழுத்தெனப் படும் அகர முதல் னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (தொல். நூன்மரபு 1, 2 என்னும் தொல்காப்பிய நூற்பாக்களால் முதலெழுத்து முப்ப தென்பதும், சார்பெழுத்து மூன்றென்பதும், இவற்றுள் முன்னை யவே சிறந்தனவென்பதும் பெறப்படும். "முன்னின்ற சூத்திரத்தாற் சார்ந்து வரன் மரபின் மூன்றலங்கடையே எழுத்தெனப்படும் முப்பஃதென்ப எனவே, சார்ந்துவரன் மரபின் மூன்றுமே சிறந்தன; ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்தில வெனவும் பொருடந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கு மென்றற்கு, எழுத்தோரன்ன என்றார்” என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. இனி, “இப் பெயர்களே பெயர், இம் முறையே முறை; தொகையும் மூன்றே” என்று நச்சினார்க்கினியர் தேற்றேகாரமிட்டுக் கூறு வதாலும், நன்னூலார் சார்பெனக் கூறிய பத்து எழுத்துக்களுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/320&oldid=1432040" இலிருந்து மீள்விக்கப்பட்டது