பக்கம்:தேவநேயம் 1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆய்தம் பாவாணர் 305 களில் க - ஃஎன்று எழுதப் பெற்றமையாலும் உயிருக்கும் மெய்க்கும் இடையில் வைக்கப்பட்டிருப்பினும் ககரத்தை யடுத்திருப் பதாலும், போப்பையர் தம் தமிழிலக்கணத்தில் 'the guttural' என்னும், கால்டுவெல் தம் ஒப்பியலிலக்கணத்தில் “guttural h" என்றும் குறித்திருப்பதாலும், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் அதன் அமைப்பு முறையை விளக்குமிடத்து "the aspirate aytam" என்று குறித்திருப்பினும், வரிபெயர்ப்பில் (transliteration) k என்னும் குறியை ஆள்வதாலும் ஆய்தவெழுத்து ககரத்தின் திரிபேயெனத் தெற்றென வறிக. ஆரிய வன்மை சான்ற வல்லெழுத்துக்கள் தமிழுக்கின்மையின், ஆய்தத்தை வடமொழி ஹகரம் (h) போன்ற மூச்சொலியாகக் கொள்வது முற்றும் தவறாம். இனி வடமொழி விசர்க்கம்: போன்ற ஒலியெனக் கொள்ளின், ஒலியளவில் விசர்க்கம் ஆய்தத்தையொத் திருப்பினும், அதில் அகரக் கூறும் கலந்திருப்பதால், அதுவும் பொருந்தாதென்க, ஆய்தம் எவ்வகையினும் உயிரேறப்பெறா எழுத்தாம் “குறியதன் முன்ன ராய்தப் புள்ளி” என்னும் நூற்பா வுரையில், “ஆய்தமான புள்ளி, 'ஆய்தப்புள்ளி' என்றார். இதனையும் ஒற்றின்பாற் சார்த்துதற் கென்க. ஒற்றேல் உயிரேறப் பெறல் வேண்டுமெனின், சார்பெழுத்தாதலின் உயிரேறப் பெறாதெனக் கொள்க” என மயிலைநாதர் உரைத்திருப்பதைக் காண்க "ஆய்தம்” அற்றாலளவறிந் துண்க வஃதுடம்பு முதலிய இடங்களில் உயிர்போல அலகு பெற்றும், “தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்” முதலிய இடங்களில் மெய்போல அலகு பெறாமலும் உயிர்மெய்களை (ஒரு புடையொத்து) உயிருமாகாமல் மெய்யுமா காமல் (அலிபோலத்) தனிநிற்றலால், 'தனிநிலை' எனப்பட்டது என்றார் நன்னூற் காண்டிகை யுரைகாரராகிய சடகோப ராமானுசாச்சாரியார். "அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு” என்னும் பாடத்திற்கு ஆய்தம் அலகு பெறல் வேண்டாமை யானும், அவ்வாச்சாரியாரே “உயிரும் மெய்யும் தம்மிற் கலத்தல் போல ஆய்தம் ஓரெழுத்தோடுங் கலத்தலின்றித் தனி நிற்றலால் தனிநிலை யெனப்பட்ட தென்றலு மொன்று.” எனக் கூறியிருத்த லானும் அவ்வுரை பொருந்தாதென்க. ஆய்தம் ககரத்தின்பாற் பட்ட ஒரு நுண்ணிய வொலி யாயிருத்தல் பற்றியே அப்பெயர் பெற்றதென் றறிக.) ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (உரியியல். 32) என்பது தொல்காப்பியம். ஆய்தப் பெயர்க்காரணங் கூறுமிடத்து, *that which is subtle, minute" என்றார் கால்டுவெலும். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி, தான் கொண்ட குறிக்கோட்கொப்ப, தமிழ்ச் சொற்களைத் தமிழ்வழி ஆராயாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/322&oldid=1432042" இலிருந்து மீள்விக்கப்பட்டது