பக்கம்:தேவநேயம் 1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

306 தேவநேயம் ஆய்தம் ஆய்தம் என்னும் தென்சொல்லைச் சார்ந்திருக்கையென்று பொருள்படும் ஆசிரிதம் என்னும் வடசொற் றிரிபா யிருக்கலா மெனக் கருதி மயங்குகின்றது. குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம் எனச் சார்பெழுத்து மூன்றாயிருக்க, அவற்றுள் ஒன்றிற்கு மட்டும் சார்ந்திருக்கைப் பொருட்சொல் எங்கனம் பெயரா யமைந்திருத்தல் கூடும்? வடமொழியைத் தமிழுக்கடிப்படையாய் வைத்து, ஒலிமுறைச் சொல்லியல் (Sound Etymology) பற்றித் தென் சொற்கள் பலவற்றை வடசொல்லெனக் கூறுவது, வடமொழி யாளர்க்குத் தொன்று தொட்ட வழக்கமாயிருந்து வருகின்றது. இனி, ஆய்தம் என்னும் தென்சொல்லை ஆயுதம் என்னும் வட சொல்லொடு மயக்கி, அடுப்புக்கூட்டும் கேடகம் மூவிலைச் சூலம் ஆகிய படைக்கலமும் போல் வரிவடிவு கொண்டிருப்பதால் ஆய்தம் எனப் பெயர் பெற்றது எனக் காரணங் காட்டுவாரும் உளர். ஆய்தம் என்னும் சொல் ஒரிடத்தும் ஆயுதம் என எழுதப் படாமையையும், ஆயுதம் என்னும் சொல்லும் ஆய்தம் என எழுதப்படாமையையும், நோக்குக. ஆரியர் நாவலந் தேயத்திற்கு வருமுன்னரே, ஆய்த வெழுத்தும் அதன் பெயரும் குமரிநாட்டில் தோன்றிவிட்டன என்னும் உண்மையையும் அறிந்து கொள்க. இனி, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் “உயிரே மெய்யே” என்னும் நூற்பாவுரையில், "சார்பிற் றோன்றும் தன்மைய” என்று மிகுத்துச் சொல்லிய வதனால், அகரத்தொடு யகரவொற்று வந்தும் ஆய்தம் வந்தும் ஐகாரத்தின் பயத்தவாய் நிற்கும் .... ஆய்தமும் யவ்வு மவ்வொடு வரினே ஐயெனெ முத்தொடு மெய்டெறத் தோன்றும் என்றார் அவிநயனார். "வரலாறு ... கஃசு, கஃதம், கஃசம் என அகரத்தொடு ஆய்தம் வந்து கைசு, கைதம், கைசம் என ஐகாரத்தின் பயத்தவாயினவாறு .” என உரைத்திருப்பது, ஆய்தத்தைப் பொறுத்தமட்டில் உத்திக்குப் பொருந்துவதன்று. கஃசு முதலிய மூன்றும் கைசு முதலிய மூன் றாகத் திரிந்திருக்கலாமேயன்றி, ஆய்தம் யகரமெய் யொத் தொலித் திருத்தல் முடியாது. ஒருகால், கள் என்பது கஃசு முதலிய வற்றின் அடியாகலின், அது கய் எனத் திரிந்திருக்கலாம். ஒப்பு நோக்க : தொள் - தொய், பொள் - பொய். ஆய்தப் பிறப்பு "சார்ந்துவரி னல்லது” என்னும் சார்பெழுத்துப் பிறப்பு நூற்பாலின் ஆற்றொழுக்கைக் கொண்டுகூட்டாகச் சிதைத்து, இரு கூறாக்கி, “சில எழுத்துகளைச்சார்ந்து தோன்றினல்லது தமக்கெனத் தோன்றுதற்கு ஓரியஸ் பிலவென்று ஆராய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/323&oldid=1432043" இலிருந்து மீள்விக்கப்பட்டது