பக்கம்:தேவநேயம் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் தமிழன் உள்ளம் எத்தகையது என்பதை விளக்குவது மங்களம், "எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம்” என்பது குறைவிலா நிறைவின் முன் வேண்டத் தக்க குறைவிலா நிறைவு வெளிப்பாடு தானே. பாடல்கள் மேடைக்கென்றே இயற்றப் பட்டவை. அவ்வாறே இசைக்கவும் பட்டவை. எளியவை! இனியவை! உணர்வு மிக்கவை! உயிரோட்டமாம் உயர்வில் கிளர்ந்தவை! அயற்சொல் விரவா அருமையும் பெருமையும் அமைந்தவை. 3. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் காட்டுப்பாடி விரிவில் பாவாணர் இருந்த நாளில் வெளியிடப்பட்ட நூல் இது. ஆண்டு 1968, முகவுரை நிறைவில், "இமிழ்கடல் உலக மெல்லாம் எதிரிலா தாள்வ தேனும் அமிழ்தினு மினிய பாவின் அருமறை பலவும் சான்ற தமிழினை இழந்து பெற்றால் தமிழனுக் கென்கொல் நன்றாம் குமிழியை ஒத்த வாழ்வே குலவிய மாநி லத்தே” என்று பாடுதல் தமிழை இழந்து பெறும் பேறு எதுவாயினும் பேறாகாது என்னும் அவருட்கிடை காட்டும். தம்மை அடிமைப் படுத்துவாரினும் மிகுதீயர் தம்மொழி அடிமைக்கு ஒப்பி நிற்பார் என்பது வரலாற்று உண்மை . முற்படை இந்தி வரலாறு, இந்தியால் விளையும் கேடு, இந்திப் போராட்டம், பல்வேறு செய்திகள், முடிபு என்னும் ஆறு பகுதிகளும், முப்பின்னிணைப்புகளும் கொண்ட இச்சுவடி 90 பக்க அளவில் உருபா 1-இல் புன்செய்ப் புளியம்பட்டி மறைமறையடிகள் மன்றப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு உதவியால் வெளியா யிற்று . இந்தியின் தோற்றம், வளர்ச்சி, இந்திக் கிளைகள், பிரிவுகள், இந்தி இலக்கியம், இந்திப் பன்மை, இந்தி தமிழ்நாட்டில் புகுந்த வகை, இந்தி பொதுமொழி என்றானவகை, இந்தி பற்றிய ஏமாற்று என்பவை முற்படையை அடுத்து எழுதப்பட்டவை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/34&oldid=1431215" இலிருந்து மீள்விக்கப்பட்டது