பக்கம்:தேவநேயம் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் இந்தியால் தமிழ் கெடும் வகைகளை, கவனக்குறைவும் புலமைக் குறைவும், கலப்பட மிகையும் சொன்மறைவும், சொற்சிதைவு, ஒலிமாற்றம், அயற்சொற்சேர்ப்பு, இந்தி மூலப்புணர்ப்பு, மதிப்புக் குறைவும் பற்றுக் குறைவும், பேச்சுக் குறைவு, எழுத்துமொழி வரலாற்றழிவு, என எண்வகையால் தமிழ் கெடும் வகையை விளக்குகிறார். இந்தியால் தமிழன் கெடும் வகையை, தமிழ மாணவர்க்கு வீண் கடுஞ்சுமை, தமிழர் குடிமைத் தாழ்வு, தமிழர் பண்பாட்டுக் கேடு, தமிழ்ச் சான்றோர்க்கு வாழ் வின்மை, தமிழின மறைவு என ஐவகையால் விளக்குகிறார். இந்திப்போராட்டம் மூன்றனையும் (1937, 1965, 1967) உரைக் கிறார். அரசியல் வாணர் இந்தியால் தமிழுக்குக் கேடில்லை என்பதை, ஓர் உணவுப்பொருள் உடலுக்குக் கேடானது என்று மருத்துவர் கூற, அதனை விற்கும் கடைக்காரன் அல்லது வேலைக் காரன் அவ்வுணவு உடலுக்கு நல்லது என்பது போல்வது என்கிறார். "பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை: கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை: பற்றும் புலமையும் அற்றமற்றவருக்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை" என தடை நலம் பயிலக் கூறுகிறார் (43), இந்தியப் பொதுமொழியாதற்கு இந்திக்குத் தகுதியின்மையை இருபது காரணங்கள் காட்டி நிறுவுகிறார் பாவாணர் 51-53 இந்தியின் மொழிகளும் கிளைமொழிகளும் 1951 குடிமதிப் பின் (Census) படி 81 பிரிவு ஆதலைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் (60-61) இந்தியா இந்தியர் எல்லார்க்கும் பொதுவாம். இந்தியார்க்கு மட்டுமே உரியதன்று என்னும் பாவாணர், உலகப் பொதுவரசே ஒற்றுமைக்கு வழி என முடிக்கிறார். பாவாணரால் 1937ல் வெளியிடப்பட்டது. கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் என்னும் இசை நூல், 35 பாடல்களைக் கொண்டது. விலை அணா 2. ஒவ்வொரு பாடல் முகப்பிலும் இன்ன மெட்டு என்னும் குறிப்புடையது. 4. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை இது தென்மொழி மாதிகையில் 2: 6 முதல் 2:12 வரை தொடர் கட்டுரையாக வெளிப்பட்டுப் பின்னர் 1988 இல் பாவாணர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/35&oldid=1431216" இலிருந்து மீள்விக்கப்பட்டது