பக்கம்:தேவநேயம் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் கங்கையாறும் பனிமலையும் பற்றிய அறிவே இவ்வுலகில் எனக்கு என்றும் பயன்தரும். இதுபற்றி என் எதிரிகட்கும் நன்றி கூறும் கடப்பாடுடையேன்" என்கிறார் (35) பாவாணர் வரைந்து தந்த ஐம்பான் சொற்களையும் ஏற்க மறுத்தார் சட்டர்சி, "ஆரியச் சார்பினர் கருங்காக்கையை வெண் காக்கை என்று எத்தனை துணிச்சலோடும், திடாரிக்கத்தோடும் கூறி வருகின்றனர்” என்கிறார் பாவாணர் (48). இதன்விளைவு மொழி நூல் துறையினின்று பொதுத்துறைக்கு மாற்றப்பட்டார். “வட நாட்டுப் புகலிலி போன்ற அயன்மையுணர்ச்சி எனக்கு நீண்டநாள் இருந்து வந்தது” என்கிறார் பாவாணர் (49). இந்நிலையில் ஐந்தாண்டாயிற்று! கண்காணகர் மாறினார். வேலைநீக்க ஓலைவந்தது. “ஆண்டி எப்பொழுது சாவான் மடம் எப்பொழுது ஒழியும் என்று என் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாட் காத்திருந்தவரும் உண்டு” என்னும் பாவாணர், 1961-ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 23ஆம் பக்கல் அண்ணாமலை நகரை விட்டு வெளியேறினேன்; என்னோடு தமிழும் வெளியேறியது” என்கிறார் (56), 5. ஒப்பியன் மொழிநூல் தமிழுலகில் பாவாணருக்குச் சிறந்ததோர் இடத்தை முதற்கண் வழங்கியது இவ்வொப்பியன் மொழி நூலேயாம். 1940இல் விலை உருபா 3-க்கு வெளிவந்த நூல் அது. ஒப்பியன் மொழி நூல் முதன்மடலம், திராவிடம் முதற்பாகம் (தமிழ்) என்னும் முகப்புடனும், "பண்டித புலவ வித்துவ கீழ்கலைத் தேர்ச்சியாளன் ஞா. தேவநேசன் எழுதியது” என்னும் குறிப்புடனும் வெளிவந்தது. பாவாணர் திருச்சி ஈபர்மேற்காணியார் பள்ளியில் பணிசெய்த காலம் இஃதாகும். “டாக்ற்றர் B. ஸ்ரீநிவாச மல்லையா அவர்கள் எனக்கு உற்றிடத்துதவிய நன்றிக் குறியாகப் படைக்கப்பட்டுள்ளது” என்று நூலைப் படைக்கிறார். மொழிநூற் பயிற்சி 1930 முதலே தமக்குப் பற்றாட்டாக இருந்துள்ளமையை முகவுரையில் சுட்டுகிறார். தாம் மொழிநூல் துறையில் ஈடுபட்டது, அதில் ஆழ இறங்கி ஆய்ந்தது, கால்டுவெலார் கூறியதை மெய்ப்பித்தது என்பவற்றை அம்முகவுரையில் தெளிவிக்கிறார். "பள்ளியிறுதி, இடைநடுவு, கலை இளைஞர் முதலிய பல்வகைத் தேர்வுகட்கும் உரிய தமிழ்ச் செய்யுட் பாடங்கட்கு, தொடர்ந்து உரை அச்சிட்டுவரும் சில உரையாசிரியர், தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/37&oldid=1431335" இலிருந்து மீள்விக்கப்பட்டது