பக்கம்:தேவநேயம் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் வரையிறந்த வடமொழிப் பற்றுக் காரணமாக, தென்சொற்களை யெல்லாம் வடசொற்களாகக் காட்டவே இவ்வுரை எழுந்தனவோ என்று தனித்தமிழர் ஐயுறுமாறு, கலை - கலா; ஆவீறு ஐயான வடசொல்; கற்பு - கற்ப என்னும் வடசொல்; சேறு - ஸாரம் என்னும் வடமொழியின் சிதைவு; உலகு-லோகம் என்னும் வடசொல்லின் திரிபு; முனிவன் - மோனம் என்னும் வடசொல்லடியாகப் பிறந்தது; முகம் - வடசொல்: காகம்-காக என்னும் வடசொல்; விலங்கு - திரியக்ஸ் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு எனப் பல தூய தென்சொற்களையும் வடசொற்களாகத் தமது உரைகளில் காட்டி வருவது பத்தாண்டுகட்கு முன் என் கவனத்தை இழுத்தது. உடனே அச்சொற்களை ஆராயத் தொடங்கினேன். அவற்றின் வேர்களையும் வேர்ப்பொருள்களையும் ஆராய்ந்தபோது அவையாவும் தென் சொல்லென்றே பட்டன என்று கூறிய அவர் ஆழமாக ஆய்வில் இறங்கியதை உரைக்கிறார், இந்நூல் திராவிடம், துரேனியம், ஆரியம், சேமியம், ஆஸ்தி ரேலிய ஆப்பிரிக்க அமெரிக்க முதுமொழிகள் என ஐந்து மடலங்க ளாகத் தொடர்வது என்று தம் திட்டத்தையும் எழுதுகிறார், மொழி நூல், பண்டைத் தமிழகம், திராவிடம் தெற்கில் சிறத்தல் தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள், பண்டைத் தமிழர் மலையாள நாட்டில் தெற்கு வழியாய்ப் புகுந்தமை, பண்டைத் தமிழ் நூல்களில் பிறநாட்டுப் பொருள்கள் கூறப்படாமை, தமிழ்த் தோற்றம், உலக முதன்மொழிக் கொள்கை என்பவை 475 பக்கங்களில் விளக்கமாகக் கூறப்படுகின்றன. பாளையங்கோட்டையில் பாவாணர் பயின்ற போது ஆசிரிய ராக இருந்தவரும் யாழ்ப்பாண நல்லூர் வாழ்வினருமாகிய துரைசாமிப்பிள்ளை என்பார் வழங்கிய மதிப்புரை எண்ணத்தக்கது. ஆசிரியர் திருவாளர் ஞா.தேவநேசன் அவர்கள் அன்புடன் உதவிய ஒப்பியன் மொழிநூல் கிடைத்து வாசித்து மகிழ்ந்தேன். இந்நூல் ஏடுதொறும் இன்பம் பயப்பது. தமிழின் தொல்சிறப்பு தமிழ்மக்களின் பண்டை மேனிலை, தமிழ்மொழியின் வரலாறு முதலியவற்றைத் தெள்ளிதின்விளக்குவது. ஆசிரியரின் ஆராய்ச்சி வன்மை சொல்லிறந்து நிற்பது. இப்பேரறிவாளர் தமிழ்நாட்டுக்குச் செய்துள்ள பேருதவியைத் தமிழ்உரிமை மிக்குடைய தமிழ்மக்கள் யாவரும் பாராட்டும் கடப்பாடுடையர். தமது நலத்தைக் கருதாது உழைக்கும் இத்தகைய கலை வல்லாரைத் தமிழ்நாடு பொன்னே போல் போற்றுதல் வேண்டும். தமிழ்மொழிக்குத் தாழ்வு நேர்ந்து விடுமோ எனக் கலங்கி நின்ற இக் காலத்தினாற் செய்த நன்றியை ஞாலத்தின் மாணப் பெரிதாகத் தமிழ்மக்கள் போற்றுவாராக. தமிழுரிமை மிக்குடையேம் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/38&oldid=1431336" இலிருந்து மீள்விக்கப்பட்டது