பக்கம்:தேவநேயம் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 தேவநேயம் தேவநேயம் சொல்லளவில் நின்றுவிடாது இந்நூலை வாங்கிக் கற்றுப் பயன் பெறுவாராக” என்பது அது. தமிழின் தகவை நிலைநாட்டிய தனிப் பேராவணம் ஒப்பியன் மொழி நூல் என்பது எண்ணத்தக்கதாம். 6. கட்டுரை இலக்கண நூல்கள் உயர்தரக் கட்டுரை இலக்கணம் இருபாகங்களைக் கொண்டது. முதற்பாகம் 1950ஆம் ஆண்டிலும் இரண்டாம் பாகம் 1951ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. இரண்டும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளே, முதற்பாகம் பக்கம் 284. இரண்டாம் பாகம் பக்கம் 251 "ஆங்கில உரைநடையைப் பின்பற்றியே தமிழ் உரைநடை வளர்க்கப்பட்டு வருவதாலும், ரென்னும் மார்ட்டினும் இணைந் தியற்றிய ஆங்கில இலக்கண நூலைத் தழுவியே சென்னை அரசிய லார் தமிழ்க் கட்டுரை இலக்கணப்பாடத்திட்டம் வகுத்திருத்த லானும் அந்நூலைத் தழுவியே இந் நூலும் வரையப்பட்டுளது." என்று முகவுரையில் பாவாணர் நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். "இந்நூல் தொடரியல், மரபியல், கட்டுரையியல் என மூவியல் களையுடையது. விரிவுபாடு கருதி இருபாகமாக வெளியிடப்பட் டுள்ளது. முதற்பாகம் முதல் இயலையும் இரண்டாம் பாகம் ஏனை இயல்களையும் கொண்டவை” என்று நூலமைதி சுட்டுகிறார். சொற்றொடர், தொடர்மொழி (Phrase) கிளவியம் (Clause), வாக்கியம் (Sentence) என பொருள் முடிவு பற்றி மூவகைப்படும் என்கிறார். இதனால் இலக்கணம் கற்பிப்பதோடு மொழியாக்கம் செய்வதையும் கற்பிக்கிறார் பாவாணர் என்பது விளங்கும். தமிழ் இலக்கணம் கற்கும் போதே ஆங்கில இலக்கணம் கற்றுக் கொள்ளச் செய்வதோடு மொழிபெயர்ப்புக்கு வேண்டும் திறத்தை உண்டாக்க வும், கலைச் சொல் உருவாக்கவும் வழிகாட்டுகிறார். அவர்தம் எல்லா நூல்களிலும் இவ்வாய்ப்புகள் உண்டெனினும் உயர்தரக் கட்டுரை இலக்கணம், கட்டுரை வரைவியல், கட்டுரைக் கசடறை ஆகிய நூல்களில் மிகுதியாம். இலக்கணத்தை விளக்குவதற்குத் தருவதே எடுத்துக்காட்டு. ஆனால் பாவாணர் காட்டும் எடுத்துக் காட்டுகள் வெவ்வேறு பயன்களை ஆக்குவன. நான்காம் வேற்றுமையேற்ற பெயர்க்குப் பின்னும் ஏழாம் வேற்றுமையேற்ற பெயர்க்குப் பின்னும் வரும் எழுவாய்களின் பயனிலை தொகும் என்பதை எடுத்துக் காட்டி விளக்குகிறார். வில்லுக்கு ஓரி, சொல்லுக்கு மாவலி கொடைக்குக் குமணன், நடைக்கு நக்கீரன் (சிறந்தவர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/39&oldid=1431338" இலிருந்து மீள்விக்கப்பட்டது