பக்கம்:தேவநேயம் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் சுருக்கம் பாவாணர் வில், சொல்; கொடை தடை- எதுகை தயம். தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்ப் பெருமக்கள் சிறப்பு என்பனவும் புலப்படச் செய்கிறார். ஒரு தன்மைப்பட்ட பலபொருள்களைச் சேர்த்துக் கூறும் பழமொழிகளில் பயனிலை தொகும் என்பதற்கு, மாங்காயிற் பெரியதும் தேங்காயிற் சிறியதும் (நல்லவை) பிரிட்டிசு நீதியும் பிரஞ்சு வீதியும் (நேர்மையானவை) என்னும் இவ்வெடுத்துக் காட்டுகளால், இலக்கணத்தொடு பொது அறிவும் உலகியலறிவும் வளர வழி செய்கிறார். எழுவாய் பயனிலை செயப்படு பொருள்களைக் குறிப்பிட 25 வாக்கியங்களை எடுத்துக் காட்டுகிறார். அவற்றுள், திராவிட மொழிகள் மொத்தம் பதின்மூன்று. தனித் தமிழை வளர்த்த பெருமை பல்லவபுரம் பொதுநிலைக் கழகத் தலைவர் தெய்வத் திரு மறைமலையடிகட்குரியது. தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட எண்வகை வனப்புள் 'இயைபு' வகைப்பட்டவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும். பழந்தமிழ்நாட்டின் பெரும் பகுதியாகிய குமரி நாடு கடலுள் முழுகிக் கிடக்கின்றது. தமிழ் இந்திய மொழிகளுக்குள் மிக முந்தியது. இத்தகையவை மாணவர் அறிவை விரிவு செய்வதுடன், ஆய்வாளருக்குப் பாவாணர் 1950 இல் கொண்டிருந்த கொள்கையும் 1981 வரை அவை வளர்ந்தோங்கிய சீர்மையும் அறிந்திட உதவும். "வடமொழி தேவமொழி என்னும் கொள்கையினாலும் பிறப்பொடு தொடர்புடைய குலப்பிரிவினாலும் தமிழுக்கு நேர்ந்த தீங்கு கொஞ்சநஞ்சமன்று. “உலகிலேயே தாய்மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு ஒன்றுதான்” (பக்.55) -பாவாணர் கொண்ட தெளிவும், உணர்வும் இளையர் நெஞ்சில் பதியும் அல்லவோ! பின்னதன் விளக்கத்தைப் பின்னுமோர் இடத்தில் எடுத்துக் காட்டாகக் கூறுகிறார். (பக்.65) ஆற்றுநீர் நடைக்கு எடுத்துக்காட் டாவது அது. "பிற நாடுகளில் எல்லாம் அரசியற் கட்சி பல இருப்பினும் நாட்டுமொழி அவை எல்லாவற்றிற்கும் பொதுவாகும். இப்பாழாய்ப் போன தமிழ்நாட்டிலோ, ஒவ்வொரு கட்சியொடும் ஒவ்வொரு மொழி தொடர்புறுத்தப்படுகிறது. அதிலும் கேடாக, நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/40&oldid=1431339" இலிருந்து மீள்விக்கப்பட்டது