பக்கம்:தேவநேயம் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் மொழியே நாட்டவரால் வெறுக்கவும் படுகின்றது. மொழியல்லவா மக்கள் முன்னேறும் வழி? தாய்மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு தவிர வேறு ஏதேனும் உண்டோ ?” என்பது அது. "தமிழ் நாகரிகம் எகிப்திய நாகரிகத்திற்கும் முந்திய தென்று நான் உண்மையைச் சொல்லும் போது தமிழரும் எள்ளி நகையாடுகின்றனர்" என்பது பட்ட புண்ணின் படுவெளிப்பாடு இல்லையா? (44). "காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையார் பாட்டுப் பாடினார். நெல்லை அழகநம்பியார் மதங்கம் (மிருதங்கம்) இசைத்தார். புதுக்கோட்டைத் தட்சிணாமூர்த்தியார் கஞ்சுரா அடித்தார். மதுரை வேணுச் செட்டியார் டோலக்குத் தட்டினார். தில்லைக் கோவிந்த சாமிப்பிள்ளையார் கின்னரி (Fiddle) எழுவினார். மன்னார்குடிப் பக்கிரிசாமிப் பிள்ளையார் குணக்குரல் ஒலித்தார். இன்னிசையரங்கு நள்ளிரவு வரை நடந்தது” (201) இது பாவாணரின் இசைக் காதல் வெளியீடுதானே! இரண்டாம் பகுதி மரபியல் கட்டுரைஇயல்பற்றியது. மரபியலை வழக்கியல் வகை, பெயர்ச்சொல், வினைச்சொல், ஒருபொருட்பல சொற்கள், இணைமொழிகள், மரபுத்தொடர் மொழிகள் என ஆறாகப் பகுத்து விளக்குகிறார். வழக்கு என்பதை இயல்பு வழக்கு தகுதி வழக்கு என்பவற் றுடன் திசை வழக்கு, இழிவழக்கு, அயல் வழக்கு என விரிக்கிறார். பெயர்ச்சொற் பகுதியில் பண்புப் பெயர்கள் கருமை, செம்மை, நீலம், பசுமை, பொன்மை, வெண்மை என்பவற்றின் அடியாக 152 சொற்களைக் காட்டுகிறார். மரபுப் பெயர்கள் என்னும் பகுதியில் ஆண்பாற்பெயர், பெண்பாற் பெயர், இளமைப்பெயர் என்னும் முப்பகுதியொடு சினைப்பெயர் ஆடையணிப்பெயர், மேய்ப்பன் பெயர் என்பவற்றையும் இணைக்கிறார். இவை தொல்காப்பியம் கற்றார்க்கும் அதிற்காணாப் பெருவரவாகத் திகழ்கிறது. மாணவர்க் காகச் செய்யும் நூல் என்பது கருதாமல் கூறவேண்டுவன வெல்லாம் கூறியாக வேண்டும் என்னும் வேட்கையில் கூறியுள்ளதை எவரும் உணரமுடியும். சினைப்பெயர் என்பதில் இலைப்பெயர், பிஞ்சுப் பெயர், வித்துப் பெயர், உள்ளீட்டுப் பெயர், குலைப்பெயர் எனப் பகுத்து விரிப்பது பாவாணர்க்கே உரியதாம். மரபியலில் ஒரு பொருட் பல சொற்களைப் பற்றிக் கூறும் போது, “அவை பருப்பொருளில் ஒத்தனவேயன்றி நுண்பொருளில் ஒத்தன அல்ல” என்கிறார். கொசு என்பது, கட்டுக்கடை நீரிலும் இனிப்புப் பொருள்களி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/41&oldid=1431340" இலிருந்து மீள்விக்கப்பட்டது