பக்கம்:தேவநேயம் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் லும் மொய்த்துக் கொண்டிருந்து மக்களைக் கடிக்காத ஒரு சிற்றீ வகை. ஒலுங்கு என்பது, சாக்கடையிலும் சதுப்பு நிலங்களிலும் இருப்பதாய், கொசுவினும் நீண்டு பருத்ததாய் மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு சிற்றீ வகை” என வேறுபாடு காட்டுகிறார். வௌவால் துரிஞ்சில் என்பவை வேறுபடும் வகையைக் காட்டுகிறார். வாவல் (வௌவால்) என்பது மரங்களில் தொங்கிக் கொண் டிருந்து கனிகளை யுண்டுவாழும் பெருவௌவால், துரிஞ்சில் என்பது, சந்து பொந்துகளிற் புகுந்திருந்து, இரவில் ஊருக்குள் பறந்து திரிந்து சிறு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் சிறு வௌவால் என்கிறார். சொல்லுதல் குறிக்கும் சொற்கள் 23 காட்டி அவற்றின் நுண்ணிய வேறுபாடும் சுட்டுகிறார். இணைமொழிகள் அக்கம் பக்கம் எனத் தொடங்கி வேலைவெட்டி ஈறாகத் தொடரமைப்பில் 403 சொற்றொடர்களை எடுத்துக் காட்டுகிறார். அவர்தம் உழைப்பின் அருமையும் நினைவின் பெருமையும் வெளிப்படுத்து வன இன்னன. இவ்வாறே மரபுத் தொடர் மொழிகளையும் அகரப்படுத்து கிறார். எதனையும் அகரமுதலி முறையில் நோக்கி வரைதல் பாவாணர் ஆழங்கால் பட்டுப்போன திறமாகும். கட்டுரை இயல் குற்றங்களும் குணங்களும் முதலாக, செய்யுட் கதையை உரைநடையில் வரைதல் ஈறாகப் பதினொரு பகுப்புகளை யுடையது. கடிதவரைவு உறவாடற் கடிதங்கள், தொழின் முறைக் கடிதங்கள் என இருபாற்பட்டு விரிவாக எழுதப்படுகின்றது. கதைவரைவு, தன்வரலாறு, உரையாடல் என்பனவும் இடம் பெறுகின்றன. கட்டுரை வரைவு எண்பது பக்க அளவு சிறக்கின்றது. தமிழன் பிறந்தகம் ஆய்வுக் கட்டுரைத் தலைப்பில் இடம் பெறுகின்றது. பாவாணர் நகைச்சுவை நால்வர் செவிடர் கதையால் விளக்கமுறு கிறது, பாவாணர் சால்பும் நன்றியுணர்வும் "சாமிநாதையர் தமிழ்த் தொண்டு என்னும் 41 அடி அகவலால் புலப்படும். இசைப்பற்றுமை கருணாமிருத சாகரம் கண்ட ஆபிரகாம் பண்டிதர் வரலாற்றால் விளங்கும். பாவாணர் எடுத்துக்காட்டும் புலமையர் பெருமக்கள் நூற்று வர்க்கு மேற்பட்டவர். தமிழகம் மறந்த பலரை அவர் நினைவு கூர்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/42&oldid=1431341" இலிருந்து மீள்விக்கப்பட்டது