பக்கம்:தேவநேயம் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் அவர் கையாளும் பழமொழிகள் பன்னூற்றுக் கணக்கின. மாணவர் நூலுக்கு இவ்வளவு உழைப்பா எனக் கற்பார் கருதாதிரார். 7. கிறித்தவக் கீர்த்தனம் கிறித்தவக் கீர்த்தனம் 1932 இல் வெளியிடப்பட்டுள்ளது. பாவாணர் அதன் ஒரு படியை முனைவர் வீ.ஞானசிகாமணி அவர்களிடம், பின்னாள் சந்திப்பு ஒன்றில் வழங்கியுள்ளார். சில பாடல்களைப் பாவாணர் பாடிக் காட்டியுள்ளார். கிறித்து பெருமா னிடத்தில் பாவாணர்க்கு இருந்த பற்றுமையையும் திருப்பணி நாட்டத்தையும் அதுகால் தெரிவித்துள்ளார். அன்றியும் கிறித்த வர்கள் தமிழின் தூய்மை போற்றுதல் பற்றியும், விவிலியத்தைத் தூய தமிழில் மொழியாக்கம் செய்தற்கு மேற்கொண்ட முயற்சிக்கு வரவேற்பு இல்லாமை பற்றியும் உரைத்திருக்கிறார். பின்னர் முற்றாகத் தமிழாய்விலேயே பாவாணர் ஈடுபட்டதையும் உரைத்திருக்கிறார். (1969) கிறித்துவக் கீர்த்தனத்தில் ஞானசிகாமணியார் கொண்ட ஆர்வம் கண்டு அதனை வெளியிட்டுப் பயன்படுத்திக் கொள்ள இசைவும் தந்திருக்கிறார். எனினும் பாவாணர் வாழ்ந்த நாளில் மீள்பதிப்பு வந்திலது. அவர் இயற்கை எய்தி முத்திங்கள் கழிந்தபின் மீள்பதிப்பு எய்தியது (ஏப்பிரல் 1981) "கடவுள் வாழ்த்து முதல் ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் ஈறாக 28 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக 51 பக்திப் பாடல்கள் உள்ளன. இன்றைய திருச் சபை பெரிதும் தமிழிசையை மறந்திருக்கும் நிலையில் இப் பாடல்களை விரும்பிப் போற்றுதல் வேண்டும்” என்கிறார் பதிப் பாசிரியர். முகவுரை வரைந்த பேரா.பொன்னு ஆ.சத்திய சாட்சி “இந்த நூலினை மேற்போக்காகப் பார்த்தால் கூட பாவாணரின் இசை யறிவும், அது பரந்து பரவிக் கொண்டிருந்த எல்லைகளின் விரிவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன” என்கிறார். இந்நூலில் உள்ள எல்லாப்பாடல்களும் இராகம், தாளம், மெட்டு ஆகியவற்றைக் கொண்டுள, கருநாடக இசை தியாகராச கீர்த்தனை, தேவார திருவாசகப் பண், நாட்டுப்புற இசை நலம் ஆகிய எல்லாமும் அமைந்த தொகை இதுவாம். மரபுப் பாவாக அறுசீர்க்கழிநெடிலடி விருத்தம் எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம் கொச்சகக்கலி இன்னவற்றை இசைத் துள்ளார், இளங்கோவடிகள் இசைப்பா, அருணகிரியார் வண்ணப்பா, வள்ளலார் இசைப்பா, அண்ணாமலையார் காவடிச் சிந்துப்பா என்பனவற்றையும் இனிமை மிக யாத்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/43&oldid=1431342" இலிருந்து மீள்விக்கப்பட்டது