பக்கம்:தேவநேயம் 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் “தாய்மொழி கெட்டாலும் தமது மதம் கெடக்கூடாதென்று கருதி வேண்டாத வடசொற்களையும் புறம்பான ஆரியக் கொள்கைகளை யும் தழுவுகின்றனர்” என்றும் மதப்பித்தர் நிலையைக் குறிப்பிடு கிறார். தமிழன் கொடை மடம் எத்தகையது? "இக்காலத்திலும் ஒருவன் பிறக்கு முன்பே தொடங்கி அவன் இறந்த பின்பும் ஒரு குலத்தாருக்கே தானம் செய்வது தமிழரின் பேதைமையாம். இதனால் வடநாட்டினின்று கையுங் காலுமாய் வந்த ஒரு சிறு கூட்டத்தினர் செல்வத்தால் சிறந்து வாழ, தமிழருட் பெரும்பாலார் வறியராய் வருந்துகின்றனர். "ஒரு பார்ப்பனர் ஒரு கொடையாளியொடு பழகப் பெறின் அவர் கொடையைப் பெரும்பாலும் பிறகுலத்தார் பெறாதபடி, தங்குலத்தார்க்கே இயன்றவரை வரையறுத்துக்கொள்வது அவர் இயல்பு". என்னும் பாவாணர் ஆங்கிலக் கல்விக்கே கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுப்பவர் தமிழை இழிவு படுத்துபவராயும் இருத்தலைச் சுட்டிக் காட்டுகிறார். தன்னின நலம் காணப் பொறாமல் அயலின தலம் நாடும் தமிழர், “நலங்கொல்லும் நச்சுக் காய்ச்சல்; வலிமையை அறுத் தெறியும் கூர்வாள்” என்கிறார். வானியல் மருத்துவம் முதலாய கலைகளை வெளிப்படுத்தாமலே இனக்கேடு செய்த வகையையும் விளக்குகிறார். குறிபார்க்கும் கேடுகளை விரித்துரைக்கும் பாவாணர், " ஒரு காரியம் செய்வதற்குக் காலம் பற்றிக் கவனிக்கக் கூடியவை யெல்லாம், தட்பவெப்ப நிலையும் செல்வ வறுமைநிலையும் தூக்க ஊக்க வேளையும் ஒளி இருட்காலமுமேயன்றி வேறன்று” என்கிறார். துறவியரைப் பின்பற்றல் என்னும் பகுதியில் “இல்லறம் துறவறம் ஆகிய இரண்டிற்கும் தனித்தனி சில சிறப்பியல்புகள் உண்டு, அவற்றில் அவை ஒன்றையொன்று பின்பற்றுதல் தவறாம்” என்கிறார். “பொருளில்லா விட்டால் ஒருவன் உயிர் வாழ முடியாது. பெண்டிர் இல்லாவிட்டால் இல்லறம் நடவாது. மக்கள் குலம் அழியும்; உடம்பைப் பேணாவிட்டால் நோய்ப்பட்டு ஒருவினையும் செய்ய முடியாது, பிறர்க்குப் பாரமாய் இருக்க நேரும். அதோடு வீடு பேற்று முயற்சியும் கெடும். பின்பு சாவும் வரும்” என்று போலித் துறவியர் கொண்ட நிலையாமைக் கொள்கையைக் கொள்வதன் கேட்டை வரிசைப்படுத்துகிறார். துறவறத்திற்குரிய அருள் இல்லறத்தார்க்கு இருக்க முடியாது. அதனாலேயே அருளுடைமை, புலால் மறுத்தல், கொல்லாமை என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/73&oldid=1431391" இலிருந்து மீள்விக்கப்பட்டது