பக்கம்:தேவநேயம் 1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் மூன்றதிகாரங்களையும் துறவறத்தில் வைத்துக் கூறினார். திருவள்ளுவர் எனத் தம் கருத்துக்குத் திருவள்ளுவச் சார்பை நாடுகிறார் பாவாணர், தமிழன் கெட்ட வழிகளில் மிகக் கொடியது ஆரியமே என்னும் பாவாணர், ஆரியர் தம்மைத் தாங்கிய தமிழரைக் கெடுக் கின்ற நன்றிக்கேடு பொறுக்குந் தரத்த தன்று என்று வருந்துகிறார். குலப்பிரிவுக் கேடு, கல்வியிழப்புக் கேடு என இருபகுப்பாய் ஆரியக் கேட்டை உரைக்கிறார் பாவாணர், பாணரின் இசை, வள்ளுவ இனக் கணியம், மருத்துவக் குடியினரின் மருத்துவம் ஆயவை ஆரியத்தால் அழிந்தமை முதலியவற்றைத் தெளிவிக்கிறார். "மதியை விளைக்காதனவும் அடிமைத்தனத்தில் ஆழ்த்துவன வும் கலையிலக்கியங்களில் பொய்யும் புனைந்துரையுமானவுமான பல தீமைகள் தமிழர்க்குப் புகட்டப்பட்டன. இன்றும் ஆங்கிலேயரி னின்று விடுதலை யாவதினும் ஆரியரினின்று விடுதலை அடைவதே தமிழர்க்கு அரிதாகின்றது” என்று முடிக்கிறார். அரசியல் கட்சிகள் என்னும் நிறைவுப் பகுதியில், “நீதிக்கட்சித் தலைவர்கள் தெலுங்கரும் மலையாளியரும் தமிழறியாதவருமாக இருந்ததனால் தமிழ்வளர்ச்சிக்கோ தமிழ்ப்புலவர் முன்னேற்றத் திற்கோ ஒன்றும் செய்யவில்லை” என்கிறார். காங்கிரசாட்சியில் தமிழர்க்கு விளைந்த தீமைகளுள் முக்கிய மானவை ஐந்து. அவை கட்டாய இந்தி, வகுப்புரிமையின்மை, பார்ப்பன ஆதிக்கம், பள்ளிகளை மூடல், பகுத்தறிவாளாமை என்பன என விளக்குகிறார். வடநாட்டுத் தலைவர்கள் தேசியத்திற்காகப் பாடுபட்டத னால் தமிழர் தமிழ்நாட்டையும் மொழியையும் இழக்கமுடியாது. தமயந்தியைப் பாம்பினின்றும் தப்புவித்த வேடன் அவளுக்குக் கணவனாக முடியாதே" என நூலை முடிக்கிறார் பாவாணர், இந்நூலின் மீள்பதிப்பு 2001இல் தமிழர் களத்தின் பொருதை வெளியீடாக அரிமாவளவனாரால் கொண்டு வரப்பட்டது, 21. தமிழின் தலைமையை நாட்டும் சொற்கள் செந்தமிழ்ச் செல்வியில் வேர்ச்சொற்கட்டுரைகள் வெளிவந்து நிறைந்தபின் தொடங்கப்பட்டதொடர்கட்டுரை ஈதாகும். பாவாணர் வாழ்ந்த நாளில் நூலுருக் கொள்ளாதது மட்டுமன்றி அதன்மேல் இருபது ஆண்டு அளவும் கூட நூலுருக் கொள்ளாதது இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/74&oldid=1431393" இலிருந்து மீள்விக்கப்பட்டது