பக்கம்:தேவநேயம் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 தேவநேயம் தேவநேயம் இக்கட்டுரைகளுள் 22 தனிச்சொற்கள் பற்றியவை. இரண்டே இரண்டு மட்டும் தொகுதிச் சொற்கள் பற்றியவை. செந்தமிழ்ச் செல்வி 52 முதல் 55 வரை (1977 முதல் 1981 வரை) வெளிவந்தவை இவை. மகன் என்னும் ஒரு கட்டுரை மட்டும் இரண்டாகப் பகுத்து வெளியிடப்பட்டது, மற்றவை எல்லாம் தனித் தனிக் கட்டுரைகளே. உம்பர், உய், உருளை, அரத்தம், கண், காந்து, காலம், கும்மல், அந்தி, எல்லா, கலித்தல், மகன், மன், தெய்வம், புகா, பள்ளி, பாதம், புரி, பொது, பகு, பேசு, திரும்பு என்பவை தனிச்சொற்கள். பூனைப் பெயர்கள், சுள் என்பவை தொகுதிச் சொற்கள், உம்பர் என்னும் சொல்லை முதற்கண் கொண்டு சொல்வதால் அச் சொல் முகப்பு முன்னுரை போலவே அமைந்துள்ளது. இந்நூலுக்கு நூல் ஆசிரியன் முன்னுரை வாயாமையால் இதனை நினைவு கூரலாம். "சமற்கிருதத்தின் தனியுடைமை யல்லாத நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள் அதற்கும் தமிழுக்கும் பொதுவாக உள்ளன. அவற்றுள் பெரும்பாலன தமிழ் என்பது, அறிவியற் சொல்லியலால் இன்று வெட்ட வெளியாகின்றது” என்னும் பாவாணர் "ஆரிய மொழிச் சுட்டுகட் கெல்லாம் தமிழ்ச் சுட்டுகளே அடிப்படை” என்கிறார். உம்பர் என்னும் சுட்டுச் சொல்லை முதற்கண் கொண்ட கரணியம் விளங்கச் செய்கிறார். ஊ முன்மைச் சுட்டு, மாந்தன் இயக்கம் அல்லது செலவு நிலத்தின் மேலும் மலையின் மேலும் நிகழ்வதால் முன்மைச் சுட்டு இடம் நோக்கி உயர்ச்சிச் சுட்டும் ஆகும் எனத் தெளிவிக்கிறார். உவன் - முன்னால் இருப்பவன் உம்பர் - மேலிடம் ஊப்பர், உப்பரிகை, சூப்பர் என இந்தி வடமொழி கிரேக்கம் முதலியவற்றில் இடம் பெற்றிருத்தலைச் சுட்டுகிறார். உகர முன்மைச் சுட்டு முற்செலுத்தும் வினைகளைக் குறிக்கும் என்பதை 'உய்' என்னும் அடிச்சொல்லால் காட்டுகிறார், உகைத்தல், உந்துதல், ஊக்குதல், ஊதுதல், உய்த்தல், இய், இயல், இயவுள் என விரிதலை விளக்குகிறார். உருளை என்னும் சொல் மூலம் உல். அது, உலம் உலவு, உலகு, உழல், உருள் முதலாக விரிவாக்கம் பெறுவதையும் திரிவதையும் தெளிவிக்கிறார். அரத்தம் என்பது சிவப்பு என்னும் பொருளது. செங் கதிர், நெருப்பு, உருமம், உருக்கு: ஒள், ஒளி, அழல், அரி, அனல், அலத்தகம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/75&oldid=1431394" இலிருந்து மீள்விக்கப்பட்டது