பக்கம்:தேவநேயம் 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் s9 இலங்கு, எல் எனத் திரிபாக்கம் பெற்று வண்ணவியல் தொடர்ந்தமைதலை நிறுவுகிறார். எடுத்துக்காட்டும் அடுத்த முதன்மைச் சொல் கண் என்பது. அது கருமைப் பொருளது. கண் என்பது மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு, துடவம், கோத்தம், கோலாமி, நாய்க்கி, பர்சி, கடபா, கொண்டி, கொண்டா, குய், குவி, குருக்கு, மாலத்தோ, பிராகுவி ஆகிய மொழிகளிலும் இப்பொருளில் விளங்குதலைப் பட்டியலிட்டுக் காட்டுவது தனிச் சிறப்பாகும். மேலை மொழிகளிலும் வடமொழியிலும் இதன் திரிபு வடிவுகளே இருப்பதையும் விரிய எடுத்துக்காட்டி காண் என்பது ஞான் ஆகி வடசொல் பெருக்கத்திற்கு உதவியதையும் விளக்கும் பாவாணர், “சமற் கிருதத்திற்கு ஞானத்தைத் தந்தது தமிழே என்னும் புகழ் நிலைத்து நிற்கும்” என்கிறார். காந்து: கல், கள், கனல்; கும் கும்பு கும்மாயம்; குள் கொள் கொள்ளி; குர் குரு குருந்தம்; கள் கடு கடுகம்; கார் கால் காய் காந்து எனப் பலவும் வெப்பப் பொருளதாதலை விளக்குகிறார். காலம்: தமிழுக்கு அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆன சொற்களுள் ஒன்றாய காலம் என்பதையும் வடசொல்லாகக் காட்டுதலை மறுத்துத் தென் சொல்லே அது என்பதை ஆட்சி முறையொடு அறிவியல் முறையில் காட்டுவதாக முன்வைத்து வேர் விளக்கம் காட்டுகிறார் பாவாணர். கால் என்பதற்கு 39 பொருள்களை வரிசைப்படுத்துகிறார். கால், தோன்றல், காலம் என்னும் பொருள் தருதலை விரிவாக விளக்குகிறார். கும்மல் என்பதில், கூடுதற் கருத்தினின்று குவிதற் கருத்தும், குவிதல் கருத்தினின்று கூம்புதல் மூடுதல் மறைதல் அடக்கமாதல் அமைதியாதல் குறைதல் முதலிய கருத்துகளும் பிறக்கும் என முறை வைப்புச் செய்து அம்முறையில் நிறைக்கிறார் கட்டுரையை. எல்லா என்னும் விளிச்சொல் ஒத்த 'ஹல்லோ' என்னும் விளிச்சொல் ஆறாயிரம் கல்தொலைவிலுள்ள ஆங்கில நாட்டில் தொன்று தொட்டு வழங்குதல், நூற்றுக் கணக்கான தென்சொல்லும் தென்சொல் திரி சொல்லுமாதலை ஐயுறுதற்கு இடமின்றிக் காட்டுமென உறுதிப்படுத்துகிறார். கலித்தல் என்னும் பிறப்புக் கருத்துவேர், குழ, குழவு; குட்டு குட்டி; குருத்து குருளை; கரு கருப்பம்; குன்னி கன்னி; கன், கன்று சன், ஜந் என மேலையாரியம் கீழையாரியச் சொல்லாதலை ஒரு நூற்றுக்கு மேற்பட்ட எடுத்துக் காட்டால் நிறுவுகிறார். உன் - முன் - மன் - மன்திரம் - மந்திரம் என வரும் விரிவாக்கம் வியப்பு மிக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/76&oldid=1431395" இலிருந்து மீள்விக்கப்பட்டது