பக்கம்:தேவநேயம் 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 தேவநேயம் தேவநேயம் தேய்த்தல் - தேய் - தேயு - தீ இயற்கை அறிவு கூர்ந்த எவரும் உணர்ந்து ஒப்பும் தகையது. இவ்வாறே பள்ளி, பாதம் புரி முதலிய சொற்களின் தனிப்பெரும் தன்மைகளும் விளக்கம் பெறுகின்றன. தமிழின் தலைமையை நாட்டும் சொற்கள் தனிச் சொற்கள் என்றும் தொகுதிச் சொற்கள் என்றும் இருவகைய. இவை முறையே தனியடியாரும் தொகையடியாரும் போல்வன என்று பூனைப்பெயர்கள் என்னும் தொகைச் சொல் எழுதும் பாவாணர் முகப்பில் பொறிக்கிறார். "தனிச் சொற்கள் மொத்தம் ஐம்பது; தொகைச் சொற்கள் இருபது” என்று சுட்டும் பாவாணர் தனிச் சொற்களாக எழுதியவை 22. தொகைச் சொற்களாக எழுதியவை 2. ஆக 70 சொற்களில் 24 சொற்களே எழுதியமைந்தது. அவர் புகழுடல் எய்திய திங்கள் அளவும் (1981 சனவரி) வந்து குறையளவில் நின்றுவிட்ட தொகுதி ஈதாம். பூசை, பிள்ளை, விடரகன், கொத்தி என்னும் பூனைத் தொகுதிப் பெயர்களையும், நெருப்புப் பற்றிய 'சுள்' அடிச் சொற்களையும் (ஒள், அழல், உண்ண ம், உருமம், சுள்ளம், சுண்டு, சூடு, சூர் சொல்) இணைத்துக் கொள்ளல் முறையாம். தமிழ்மொழி அமைப்பை விளக்கும் தனிவகுப்பு நடாத்தவும் பாவாணர் திட்டமிட்டார் (செ.செ.54:254) அத்திட்டத்திற்குச் சொல்லாய்வாளர், மொழிப்பற்று மிக்கார், தமிழுலா வந்த பெரியவர்கள் எனப் பலரை வகுப்புக் கேள்வியராகத் திட்டப் படுத்தினார். அத்திட்டம் தமிழகப் பரப்புத் தழுவியதாக இருந்தமை யால் அவர்கள் சென்னையில் கூடுதலும் கூட்டுதலும் அரிதாக அமைந்து போயது. இவ்வாறே பர்.தெ.பொ.மீ. அவர்கள் எழுதிய 'தமிழ் இலக்கணத்தில் அயன் மொழியமைப்புகள்' என்னும் 330 பக்கத் திரிபாராய்ச்சி நூலைச் சிறு சிறு பகுதியாகச் செந்தமிழ்ச் செல்வியில் மறுத்து எழுதினார் பாவாணர். அதனை முற்றும் மறுக்க மூவாண் டாகும் ஆதலாலும், அதனால் தொகுப்பு நோக்குக் கெடும் ஆதலாலும், தமிழுக்குப் பெருந் தீங்கு விளைக்கும் கடுநச்சுப் பகுதிகள் இறுதியில் இருப்பதனாலும், அவற்றை விரைந்து மறுத்தொழிக்க வேண்டும் ஆதலாலும் மெய்யன்பர் சிலர் விருப்பிற் கிணங்கியும் மறுப்பு முழுதும் ஓர் எதிர் நூலாகவே வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று செந்தமிழ்ச் செல்வியில் ஓர் அறிவிப்புச் செய்து தொடர் கட்டுரை நிறுத்தப்பட்டது. நூலுரு வாக்கம் செய்யப் பெறாமல் நின்றும் போயிற்று. இவ்வாறு பாவாணர் திட்டமிட்டு நிறைவேறாது நின்ற சுவடிகளும் நூல்களும் பலவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/77&oldid=1431397" இலிருந்து மீள்விக்கப்பட்டது