பக்கம்:தேவநேயம் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 22. திராவிடத் தாய் 1944 இல் வெளிவந்த நூல் இது. முதற் பதிப்பு பாவாணர் தம் பதிப்பாக வந்தது. பின்னர் 1955இல் கழகப்பதிப்பாக வெளிப்பட்டது, 112 பக்கம் உடைய இந்நூலின் முன்னுரை 32 பக்கங்களைக் கொண்டுள்ளது. முகவுரை நான்கு பக்கங்கள் உண்டு, ஆய்வாளர்கள் பிற நாட்டுச் செய்திகளாயின் மறைந்த உண்மையை வெளிப்படுத்து வதும், தமிழ்நாட்டுச் செய்திகளாயின் வெளிப்பட்ட உண்மையை மறைத்து வைப்பதுமே தொழிலாகக் கொண்டுளர் என்று வருந்தும் பாவாணர், கார்காலத்தில் மறைக்கப்பட்ட கதிரவன் திடுமென ஒரு நாள் திகழ்ந்து தோன்றுவது போல், தமிழும் ஒருநாள் உலகத்திற்கு வெளிப்படும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று என்கிறார். தமிழையும் பிற திரவிட மொழிகளையும் ஆராய்வதால் தமிழின் சிறப்பையும் பழந்தமிழரின் பெருமையையும் அறிவதுடன், உலக முழுதும் தழுவிய குல நூல், வரலாற்று நூல், மொழி நூல் ஆகிய முக்கலைகளின் திறவு கோலையும் காணலாம் எனத் தெளிந் துரைக்கிறார். முன்னுரையில், மொழி என்றால் என்ன, தமிழ் மொழி எது, தமிழ் என்னும் பெயர், குமரிநாடே தமிழ் தோன்றிய இடம், தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது, தமிழே பிற திரவிட மொழிகளாகத் திரிந்தமை, தமிழினின்று பிற திரவிட மொழிகள் வேறுபடக் காரணங்கள், திரவிடத்திற்கு ஆரியக் கலப்பால் வந்த கேடு, திரவிட மொழிகளெல்லாம் சேர்ந்தே முழுத்திரவிடம் ஆகும் என்பது, தமிழ்ப் பண்படுத்தம் கால்டுவெல் தமிழைச் சிறப்பித்துக் கூறுவன. கால்டுவெல் கண்ட மொழி நூல் முடிபுகள் என்பவை முன்னுரையில் விளக்கம் பெறுகின்றன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு ஆகிய திரவிட மொழிகளின் வரலாறு, திரிபுற்றவகை, ஒப்பீடு என்பவற்றைத் தனித்தனிப் பகுதியாக ஆய்கிறார். ஒவ்வொரு மொழியிலும் வழங்கும் சொற்கள், பழமொழிகள் கதைகள் என்பவற்றையும் இலக்கண மரபையும் இனிதாக விளக்குகிறார். முடிவாக, “இதுகாறும் கூறியவற்றால் தமிழல் - திரவிட மொழிகள் உயிரும் உடம்பும் போன்ற அடிப்படையும் முக்கியமு மான பகுதிகள் எல்லாம் தமிழே என்றும், ஆடையும் அணியும் போன்ற மேற்புற வணியில் மட்டும் ஆரியம் தழுவின என்றும் அவ்வாரியமும் (அவை) தமிழைத் தழுவுங்கால் வேண்டாததே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/78&oldid=1431398" இலிருந்து மீள்விக்கப்பட்டது