பக்கம்:தேவநேயம் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் என்றும் வடமொழியைத் தமிழல் - திரவிடத்தின் தாயெனக் கூறுவது பெரிதோர் ஏமாற்றமென்றும் தெரிந்து கொள்க” என்கிறார். ஆன, ஆடு, எரும, ஒட்டகம், கழுத, வெருகு, கரடி, கன்னு, காள, குதிர, குரங்கு, நரி, நாய், பன்னி , புலி, பூச், மான், முயலு, மூரி, குறுக்கன் (குறுநரி) இவை மலையாளத்தில் வழங்கும் விலங்குப் பெயர்கள் சில. தந்த்த, அப்ப, அய்ய, தந்தெ, அண்ண, நம்ம, மாவ, அச்ச, அம்ம, அவ்வே, தாயி, அக்க, தங்கி, அத்தெ இவை கன்னடத்தில் வழங்கும் முறைப்பெயர்களுள் சில. தல, நுதரு. கன்னு, கன்னீரு. முக்கு, பல்லு, நாலுக, செவி, தாடி தவட முகமு, மீசமு, மெட சேயி, உல்லமு, தொட, குதிகாலு, தோலு, ரத்தமு, நரமு இவை தெலுங்கில் வழங்கும் உறுப்புப் பெயர்களுள் சில. அப்ப, அரி, உப்பு, எண்ணெ , கஞ்சி, களி, கூளு, சாறு, தீனி, மந்து - இவை துளுவில் வழங்கும் உணவுப் பொருட் பெயர்களுள் சில. விளக்கச் சொல் இல்லாமலே காணத்தக்கவை தாமே இச்சொற்கள். பாவாணர் விளக்கச் சொல் தந்துளார். 23. திருக்குறள் தமிழ்மரபுரை திருக்குறளுக்கு உரைகண்ட பாவாணர், அவ்வுரை தமிழ் மரபு காக்கும் உரையென்பதை, நூற்பெயர் அறிந்த அளவால் அறியுமாறு இப்பெயர் சூட்டினார். அதற்குக் கரணியம், திருக்குறளின் முந்து நூல்கள் எனப்பட்டனவும், அதற்கு எழுதப்பட்ட உரைகளும் வடமொழி வழிப்பட்டனவாகக் காட்டப்பட்ட முரணை அகற்றி அரண் சேர்த்தற்கே ஆகும். "பெறுதற்கரிய அறுசுவை அரச உண்டியில் அங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப உண்மைக்கு மாறானதும் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடுபயப்பதுமான ஆரிய நச்சுக் கருத்துக்களை, முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டு” பரிமேலழகர் புகுத்தியிருப்பதை விலக்கவே இவ்வுரை எழுதியதாகப் பாவாணர் சுட்டுவது நூல்வரு நோக்கத்தைப் புலப்படுத்தும். நேசமணி பதிப்பக வெளியீடாக 1969 இல் 15 உருபா விலையில் வெளிவந்தது தமிழ் மரபுரை. பக்கங்கள் 832 முகவுரை, நன்றியுரை, உள்ளடக்கம், முன்னுரை, ஆகியவை முற்பகுதியாக நூல் தொடர்ந்து, 24 பின்னிணைப்புகள், அருஞ்சொல் அகரமுதலி, பாட்டு முதற்குறிப்பு அகரமுதலி என்பவற்றொடு நூல் நிறைகின்றது. இவற்றுள், திருக்குறளிலுள்ள வடமொழிச் சென்ற தென்சொற்கள் என்னும் பகுதி, 'அங்கணம்' தொடங்கி, 'வேலை' முடிய 124 சொற்களின் வேர் விளக்கம், பொருள் விளக்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/79&oldid=1431399" இலிருந்து மீள்விக்கப்பட்டது