பக்கம்:தேவநேயம் 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 63 எடுத்துக்காட்டு என்பவற்றையுடைய தாகும். இவற்றை அகரநிரலில் அமைத்துள்ளமை மேலும் சிறப்பாம். திருக்குறட் சிறப்புச் சொற்கள் என அதிநுட்பம், அளறு அறன்கடை, கஃசு , குறியெதிர்ப்பை , கோட்டி கொளல், சோகா, தீயுழி, தோல், நெடுநீர், வரன் என்பவற்றைச் சுட்டுவதும், "திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழகத்துப் பிறந்து வாழ்ந்தவரேயாயினும், இவ்வுலகம் எங்குமுள்ள அறுவகை யுயிரிகளும் எக்காலத்தும் இன்புற்று நீடு வாழ வேண்டும் என்பதே அவர் திருவுள்ளமாகும்” என்பதும் அரிய இனிய தொகைச் செய்திகள் (இணைப்பு 6; 23) தமிழ ஆரியக் கருத்து வேறுபாடுகள் என இருபத் தொன்றனைப் பட்டியலிட்டுக் காட்டுவது பாவாணர் தம் கூர்ந்தாய்வு முத்திரையாகும். (இணைப்பு 18) தமிழ நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டமை, தமிழர் வாழ்க்கைக் குறிக்கோள், தமிழிலக்கியப் பொருட் பாகுபாடு, திருவள்ளுவர் வரலாறு, திருவள்ளுவர் காலக் குமுகாய நிலை, திருவள்ளுவர் காலச் சமயநிலை, திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம், திருக்குறட் சிறப்பு, பாயிர விளக்கம், பரிமேலழகர் நச்சுக் கருத்துக்கள் என்னும் பன்னிரு தலைப்புகளில் முன்னுரை வழங்கியுள்ளார். (1-34). திருவள்ளுவரின் பெற்றோர், உடன்பிறந்தோர் பற்றியவற்றைக் கட்டுக்கதை என்னும் பாவாணர் வாசுகியார் மனைவி என்பதில் நம்பத்தகாதது ஒன்றுமில்லை என்கிறார். இவர் பெயரால் வழங்கும் சில நூல்கள் இவர் பெயரைத் திருட்டுத் தனமாகக் கொண்டனவே என்கிறார். திருக்குறளில் 16 சொற்களே வடசொற்கள் என்றும் அவற் றுள்ளும் அமரர், காரணம், பாக்கியம், வித்தகர் என்னும் நான்கும் தமிழ் வேரினவே என்றும் கூறுகிறார். திருவள்ளுவர் பாண்டி நாட்டவர் என்பதை ஊருணி, பைய, வாழ்க்கைத்துணை என்னும் சொற்களைக் கொண்டு நிலைப்படுத்துகிறார். "தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர்” என்பதும், "இருமைக்கும் உதவும் விழுமிய பொருளை அணிமிக்க குறள் வெண்பாவால் பாடியிருப்பது பன்மணி பதித்த ஓவிய வேலைப் பாட்டுப் பொற்கலத்தில் அரசர்க்குரிய அறுசுவை யுண்டியைப் படைத்தாற் போலும் என்று திருக்குறளை நயப்பதும் பாவாணர் உள்ளச் சுரப்பாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/80&oldid=1431400" இலிருந்து மீள்விக்கப்பட்டது