பக்கம்:தேவநேயம் 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் நூலில் கடவுள் வாழ்த்து என்பதை முதற்பகவன் வழுத்து என்கிறார். அதிகாரப் பெயரை விளக்கி, அடுத்து வரும் அதிகார இயைபு காட்டி முகப்பு, அதிகாரம் தோறும் அமைக்கிறார். இதன் தொடருரை (இ-ரை) என்றே சொல்லுரை (பதவுரை) வரைகின்றார். பெரும்பாலும் சொல்விளக்கம் பொருள் விளக்கம் இலக்கணக் குறிப்பு பிறருரை மறுப்பு, ஏற்பன ஏற்பு, மேற்கோள் ஒப்புமை என்பனவெல்லாம் விரிவாகவே வழங்குகிறார். "கடவுளை வணங்காவிடின் கல்வியால் பயனில்லை என்பது இக்குறட் கருத்து” எனக் கருத்துரையும் கருதுமாறு உரைக்கிறார். (2) இந்நான்கு குறளாலும், இம்மூன்று குறளாலும் எனத் தொடர்புரை வழங்கிச் செல்கிறார். வடநூற்சார்பு வேதவழக்கு எனப் பரிமேலழகர் கூறுவன வற்றை முற்றாக மறுத்து தென்னூற்சார்பு, தென்வழக்கு என்ப வற்றின் வழிப்பட்டது திருக்குறள் என்பதை நிலைநாட்டுதற்கே திருக்குறள் தமிழ் மரபுரை பாவாணர் வரைந்தார் என்பது நுனித்து நோக்குவார்க்கு எளிதில் விளங்கும். மேலும் நம்பா மதத்தார் உரைவழியில் பாவாணர் செல்லாமையும் புலப்படும். பெரும் பாலும் வழிமாறும் இடங்களில் அன்றிப் பரிமேலழகர் உரை, விளக்கம் ஆயவற்றை ஏற்றுக் கொண்டே பாவாணர் நடையிடு கிறார். வடசொல் என்றோ வடநூல் வழக்கு என்றோ அவர் கூறும் இடங்களில் திட்டவட்டமாக மறுக்காமல் பாவாணர் சென்றா ரல்லர், அவர்கூறும் பொருளைப் பொருளாகக் கொண்டாலும் விளக்க வகையாலேயே பாவாணர் அவர்க்குப் பெரிதும் முரண் பட்டுச் செல்கிறார். பரிமேலழகர் நச்சுக் கருத்துக்கள் என்று முன்னுரையில் (32-34) குறிப்பிடுவனவற்றை நோக்கிய அளவால் இவ்வுண்மை புலப்படும். பாவாணர் உரைவரைந்து அதன்மேலும் கொள்ளத்தக்க வகையில் ஒருபொருள் கிட்டுமாயின் அதனைச் சுட்டிக் காட்டி இவ்வாறு உரைக்கினும் பொருந்தும் என்கிறார். எ-டு: 24. செயற்கரிய செய்வார் என்னும் குறளில் பெரியர் சிறியர் என்னும் இருவகுப்பார்க்கும் இடையே வேறொரு வகுப்பாரை (உரியர்) உரைத்தல் சிறப்பன்று எனப் பாடவேறு காட்டுவாரை மறுப்பார். சுவை ஒளி என்னும் குறளில் மெய்யியல் கருத்துக்கள் மிகப்பல உரைக்கிறார். 'பூசனை' என்பதற்கு மரபு விளக்கமும், பொருட்பெண்டிர் என்னும் குறளில் வரும் பொய்ம்மை முயக்கம் என்பதற்கு நாட்டு வழக்கமும் கூறிக் கருத்து விளக்கம் செய்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/81&oldid=1431401" இலிருந்து மீள்விக்கப்பட்டது