பக்கம்:தேவநேயம் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் சுருக்கம் பாவாணர் 65 அறத்தாறிதுவென வேண்டா என்னும் குறளில் (38) "பல்லக்கைச் சுமப்பாரையும் அதில் ஏறிச் செல்வானையும் காட்டி இதுதான் அறத்தின் பயன் என்று கூறாதே என்பதை இக்குறளுரை யாகக் கூறுவது இக் காலத்திற்கேற்குமேயன்றி ஆசிரியர் கருத் தாகாது” என்கிறார். தெய்வம் தொழாஅள் என்னும் குறளில், ஒழுகால் வள்ளுவர் குறள் பண்டைக் காலத்து ஒரு பத்தினிப்பெண் செய்த இறும்பூதை (அற்புதத்தை ) அடிப்படையாகக் கொண்ட தாகவும் இருக்கலாம் என்னும் பாவாணர் உயர்வு நவிற்சியாகக் கொள்ளின் ஒரு குற்றத்திற்கும் இடமில்லை என்பார். மேலும் "புரட்சிப் பாவலர் பாரதிதாசனார் பெய்யெனப் பெய்யும் மழை போல்வாள் என்று பொருள் கூறிப்பொருத்தமாக்குவர்” என்றும் குறிப்பிடுகிறார். (55) அடியளந்தான் தாயது என்பதற்கு (610) கதிரவன் மூவெட்டால் கடந்த மாநிலம் முழுவதையும் எனப்புதுப் பொருள் காண்கிறார். வேத ஆரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததைக் காட்டுகிறார். மருந்து என்னும் அதிகாரப் பத்துப் பாட்டுக்கும் பதினைந்து பக்கம் உரைவரைகிறார் பாவாணர். அத்தகு விரிவுரை அனைத்திற் கும் எழுதியிருப்பின் ஈராயிரம் பக்கங்களுக்கு மேலும் உரை வளர்ந்திருக்கும். நாட்டுமருத்துவத் தோய்வு நன்கு வெளிப்பட விளக்கும் உரை அது. (அதி, 95) இன்பத்துப்பால், களவியல் முகப்பு விரிவு மிக்கது. இன்பத்துப் பால் குறள்களுக்கு நிகழ்ச்சி விளக்கம் (கிளவி விளக்கம்) காட்டி நாடக நடைப்படுத்துகிறார். உற்றுழி உதவினோர் உறுபொருள் கொடுத்தோர் பற்றிய செய்திகள் கட்டளைக் கலித்துறைப் பாவாகக் கிளர்ந்தன. உலகத் தமிழ்க்க ழக முதல் மாநாடு பறம்புக் குடியில் (1969) நிகழ்ந்த போது அம் மாநாட்டில் வெளியிடப் பட்டது திருக்குறள் மரபுரை, உரிமை ஞானமுத்து தேவநேயன் (1902) என்பது, 24. துவாரகை மன்னன் அல்லது பூபாரந் தீர்த்த புண்ணியன் இச்சுவடி பாவாணர் மன்னார்குடியில் பணியாற்றிய காலத்தில் வெளிப்பட்டது. ஆண்டு 1945 . "ஸ்ரீ ஷண்முகா பப்ளிஷிங் ஹவுஸ்” வெளியிட்டுள்ளது. விலை அணா 12. இதற்குக் கா.சுப்பிர மணியப்பிள்ளை முன்னுரை வழங்கியுள்ளார். அவர் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலத்திலேயே முன்னுரை வழங்கியுள்ளார். நாள்: 18929. முன்னுரை வழங்கிய காலத்திற்கும் பதிப்பிற்கும் ஏற்பட்டுள்ள இடைவெளி அப்பதிப்பு மீள்பதிப்பு என்பதை உணர்த்துகிறது. பக்கம் 89.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/82&oldid=1431403" இலிருந்து மீள்விக்கப்பட்டது