பக்கம்:தேவநேயம் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் 'செவ்விதிற் சுருக்கி வரையப்பட்ட நூல்' என்றும் , இனிய உரைநடையும் இடைஇடை எளிய அழகிய பாடல்களும், கொண்ட நூல் என்றும் "மாணவர் செந்தமிழ் உரைநடை பயில வழிகாட்டி" என்றும் கூறுகிறார் கா.சு. மாணவர் பயன்பாடு கருதி எழுதப்பட்ட நூல் இது என்னும் பாவாணர், " இதில் பாகவதப் பகுதியும் பாரதப் பகுதியும் கலந்துள்ளன. இதுவே இந்நூற்குச் சிறப்பாகும். வேண்டாப்பகுதிகள் விலக்கப்பட்டன” என்கிறார். திருவவதாரம் தொடங்கி வைகுந்த வைபவம் இறுதியாக 29 குறுந்தலைப்பில் கதை வரையப்பட்டுள்ளது. முதற்கண் தோற்றுவாயுடன் 30 பகுதி. நிறைவில் தசாவதார நோக்கம் என்பதொன்றும் உண்டு. பதின் திருப்பிறப்புகளைப் பற்றியும் சுருங்கக் கூறி வில்லியார் பாடலொன்றை எடுத்துக் காட்டுகிறார். தசாவதார நோக்கம் "கொடியரை நீக்கி அடியரைக் காத்தல்" (துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்) என்கிறார். அன்றே மொழியாக்க நோக்கு அரும்பியமை இப்பெயர்ப்பாலே புலப்படும். "ஒருவனுக்குத் தன் உயிரே மிகவும் அருமையானது ஆயினும் அறிவுள்ளவன் எப்போதும் மன்னுயிரையே மதிப்பான் (4) "கல்வியினால் அறிவும், அறிவினால் ஒழுக்கமும், ஒழுக்கத்தி னால் உயர்வும் உண்டாகும்” (28) உலகத்தில் ஒருவர்க்கு உடன்பிறப்பு மிகவும் அருமையாம். அதிலும் உடன்பிறந்தார் ஒற்றுமையால் உடன் வாழ்தல் மிகவும் பெருமையாம். கண்ணிருந்தால் கைப்படும். நாவிருந்தால் பல்படும். அதுபோல உடன்பிறந்தார்க்குள்ளும் தவறுண்டாதல் உலக வழக்கம். அதுபற்றி ஒருவரை ஒருவர் பகைத்தல் ஒவ்வாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை ” (58) "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; அதுபோலப் பிள்ளைகளும் அளவாய்ப் பிறக்கவேண்டும் ” (75) "உழவர் பயிரை வளர்ப்பதற்குக் களைகளைக் களைவார்; களைகள் இல்லாத விடத்துப் பயிர் அடர்த்தியாயிருப்பின் பயிரையும் களைவார்” (81) இன்னவை இடை இடையே வரும் அருமை உரைகள். சூதும், தாயம் சீட்டு கவறு கட்டம் சொக்கட்டான் எனப்பல. இது பாவாணர் இளமையிலேயே கொண்ட தொகை (தொகுப்பு) நிலை. (55) 'குறை யறை' என்பது குறைநீக்குதல் (74) அறிவறை" என்பது சிலம்பு. "கட்டுரைக் கசடறை" என்பது பாவாணர் நூல்களுள் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/83&oldid=1431404" இலிருந்து மீள்விக்கப்பட்டது