பக்கம்:தேவநேயம் 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் "குடிப்பது கூழ்; உடுப்பது கந்தை” (76) "ஆட்டத்தைக் காட்டி நாட்டத்தைக் கவர்ந்தான் ” (55) "கண்ணபிரான் ஒருவரே திருக்குழந்தை, மற்றவை கருக்குழந்தை ” (77) “பற்றறுத் தார்க்கெல்லாம் பரமபதப் பேறு திண்ணம்” (87) - இன்னவை பாவாணர்க்கு அந்தாளே கைவந்த எதுகை, மோனை, இயைபு நடை வனப்புகள். கிட்டுதற்கு அரிதாகிவிட்ட இந்நூல் சிங்கபுரி வாழ் சீர்மையர் கோவலங்கண்ண னார் வழியாகக் கிடைத்தது (16.42002) 25. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் தமிழ நாகரிகம் மேலை நாட்டார்க்குத் தெரிந்த அளவு கூடத் தமிழர்க்குத் தெரியாது. மறையுண்டு கிடக்கின்றது. இவ்விரங்கத் தக்க நிலைமை தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையா யிருத்தலால் இதை நீக்குதற் பொருட்டு இந்நூலை எழுதத் துணிந்தேன்” என்கிறார் பாவாணர். இந்நூல் 1966 இல் நேசமணி பதிப்பக வாயிலாகக் திருச்சி மாவட்டப் பெரம்பலூர் வட்டச் செட்டிக்குளத்துப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் உதவி கொண்டு வெளியிடப்பட்டது, நாகரிகம் என்னும் சொல்விளக்கம் பண்பாடு என்னும் சொல்விளக்கம், இரண்டற்கும் உள்ள வேறுபாடு, இந்திய நாகரிகம் தமிழரதேயாதல், இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள், குமரிக்கண்ட இடப்பெயரும் மூவேந்தர் குடிப்பெயரும் என்பவை முன்னுரையாய் 23 பக்கங்களில் அமைகின்றன. பண்டைத் தமிழ நாகரிகம், பண்டைத் தமிழப் பண்பாடு என்பவை இருபகுதியாய் நூல் 240 பக்க அளவில் அமைகின்றது. விலை உருபா 625 | நாகரிகம் என்பது நகரமக்களின் திருந்திய வாழ்க்கை . நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். ஆங்கிலத்திலும் நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே என்று விளக்குகிறார் பாவாணர். "பண்படுவது பண்பாடு, பண்படுதல் சீர்ப்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப் பட்ட நிலமென்றும் திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் (தனிப்பாடல்) என்றும் திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம்” என்கிறார் (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/84&oldid=1431405" இலிருந்து மீள்விக்கப்பட்டது