பக்கம்:தேவநேயம் 1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் இரண்டற்கும் உள்ள வேறுபாட்டை, நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை . அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது" என்று தெளிவாக்குகிறார். நாகரிகத்தினும் உயர்ந்த நிலையே பண்பாடு, நாகரிகம் இன்றியும் பண்பாடு உண்டு. அஃறிணையாயினும் பண்பாட்டில் மக்களினும் விஞ்சியவை உண்டு என்று காக்கை, புறா முதலிய வற்றைக் காட்டிக் கூறுகிறார். (9) தமிழ நாகரிகப் பகுதியை மொழி துப்புரவு, ஊண், உடை, அணி, உறையுள், ஊர்தி, வாழ்க்கை , சமயம், தொழில், வாணிகம், அரசியல், கல்வி, கலை, அறிவியல் பொழுது போக்கு எனப் பகுத்துக் கொண்டு வரைகிறார். கலைகள் இருபத்து மூன்றும் அறிவியல்கள் இருபத்து நான்கும் இடம் பெற்றுள. இந்நூலுள் நாகரிகப் பகுதியே மிகுதி (24-195) பண்பாடு என்னும் பகுதியில் மாவலி தனக்கு இறுதி நேரும் என்று அறிந்தும் வாய்ச் சொல் தப்பாமையையும். அந்தணர் பண்பாடு அருள் என்றும், மூலன் என்னும் ஆயன் இறக்க அவன் ஆக்களின் கவலையைத் தீர்த்த திருமூலர் அருண்மையையும் சுட்டுகிறார். | புலவர் ஆசிரியர் பூசாரியர் கணியர் ஓதுவார் கணக்கர் எனப் பல பெயர் பெற்றுக் கல்வித் தொழில் புரியும் இல்லறத்தார் பார்ப்பார் எனத் தெளிவிக்கிறார். (204) அறத்திற்காகக் காசிலா ஓடம் விடுவாரையும், எளியரிடம் களவு செய்யாக் கள்வர் பண்பாட்டையும் எடுத்துரைக்கிறார். மந்திரம் என்னும் சொல் வரலாற்றை இணைப்பாகக் கூறும் பாவாணர் மன் திரம் என்னும் கூட்டுச் சொல் மந்திரம் எனத் திரிந்தமையை விளக்குகிறார் வாய்மொழியே மந்திரம் என்றும் நிலை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்பது தொல்காப்பியர் உரை எனினும் அவர்க்கு முற்பட்ட பழமையது என்றும் தெளிவிப்பார். 26. பழந்தமிழாட்சி 1952இல் வெளிவந்தது இந்நூல். பழந்தமிழாட்சி பற்றித் தமிழில் போதிய விரிவான நூல் இல்லாமையால், தாம் இலக்கியம் கல்வெட்டு உலக வழக்கு ஆகிய முந்நிலைக் களத்தினின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/85&oldid=1431406" இலிருந்து மீள்விக்கப்பட்டது