பக்கம்:தேவநேயம் 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் தொகுத்து எழுதியதாகக் கூறுகிறார் பாவாணர். இந்நூலைப் பயில்வார் பழந்தமிழ் அரசியலைப் பற்றித் தெளிவான அறிவு பெறுவார் எனக்கருதுகிறார் பாவாணர். அரசியலுறுப்புகள் முதலாக அரசர் முடிபு ஈறாக 26 தலைப்புகளில் நூல் இயல்கின்றது. பின்னிணைப்பாக மக்கள் நிலைமை, மொழி நிலைமை, சீமையரசாட்சி வகைகள் வேத்தியல் எழுத்தும் நூல்களும் சிறப்புப் பெயர்களின் அகர வரிசை என்பவை இடம் பெற்றுள, நூல் 195 பக்கங்களில் இயல்கின்றது. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என உறுப்புகளை எண்ணும் நாம், "ஒரு நாடு அல்லது சீமை (State).! ஆள் நிலம் (Teritory) 2 குடிகள் (Population) 3. அரசியல் (Government) 4.கோன்மை (Sovereignty) என நாலுறுப்புகளையுடையது” எனப் பாவாணர் தொடங்குவதை நோக்க உலக அரசியலொடு ஒப்பு நோக்குப் பார்வை பாவாணர்க்கு உளதாதல் தெளிவாம். அரசியல் என்பது சட்டம் அமைப்போர், கருமம் ஆற்று வோர் நடுத்தீர்ப்பாளர் என்னும் முத்துறை அதிகார வகுப்புகளை உறுப்பாகக் கொண்டது என்பதும் மேல் விளக்கம் தரும் சிற்றரசர் மன்னர், தலைமையரசர் வேந்தர், கோ எனவும் வழங்கப்பட்டதைத் தெளிவிக்கிறார். (16) அரசர் அமரும் அரியணைகளுக்கும் பெயருண்டு என் கிறார். (25) | அரசச் சின்னங்கள் பதினைந்தை வரிசைப் படுத்தி விளக்குகிறார். (21-30) அரசியல் வினைஞர் பெயர் செயல் ஆயவற்றை விரிவாகக் கூறுகிறார். (31-39) வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் தகுதி எனவும் தகாதார் எவர் எனவும் கூறுவன கொண்டு அந்நாளின் அரசு அறத்தை எத்தகு சிறப்பாகப் போற்றியது என்பதை அறிவதுடன் முடியாட்சியில் போற்றிய குடியாட்சி முறைச் சிறப்பும் புலப்படும். இந்நாளில் தக்கார் தகுதிக்கு எவரேனும் அமைவரா என மேலோட்டமாகப் பார்ப்பினும் அமையார் எனவே படுதல் உறுதி. பாதுகாப்பு என்பதை விளக்கும் பாவாணர் வளைவிற் பொறி முதலாக அரிநூற் பொறி ஈறாக முப்பத்தைந்து பொறிகள் அரணத் திருந்தமையைச் சிலம்பு வழியாகக் காட்டுகிறார். ஆவணத்திற்கு ஏடு,ஓலை, கரணம், கலம், சீட்டு, செய்கை , தீட்டு, நறுக்கு பட்டிகை, பட்டயம், முறி முதலிய பிற சொற்களும் அவ்வவ் வினைக்கும் எழுதப்பட்ட கருவிக்கும் ஏற்ப வழங்கியமை தெரிவிக்கிறார் (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/86&oldid=1431407" இலிருந்து மீள்விக்கப்பட்டது