பக்கம்:தேவநேயம் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் வாங்கப்பட்ட வரிகள் அங்காடிப்பாட்டம் முதலாக மடக்குவரி ஈறாகக் குறிப்பிடுகிறார். வரிகளின் எண்ணிக்கை 225. பாவாணர் செய்த அடைவு முயற்சி காட்டும் சான்று இது. இக்காலத்தில் இல்லாத ஆள்வரி, மணவரி. துலாபார வரி முதலிய சில வரிகள் அக்காலத்திருந்தமை சுட்டுகிறார். (86) அளவைகள் கூறும்போது கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண்கீழ் முந்திரி 1/102400 என்கிறார்.(93) அரசர்க்கு அடங்காது வாழ்ந்தவர் ஊர், 'அடங்காப் பற்று'! 'என்ன செய்வாய் என்னை ?' என்பார் என்றும் உண்டு தானே! (125) 'ஆசு கவிகள் காசு' என்பது பிற்காலத்து வாங்கப்பட்ட ஒரு வரி. அது அரச ஒப்பம் பெற்றுப் புலவர் வாழ்க்கைச் செலவுக்கு வாங்கப்பட்டது போலும் என்கிறார் பாவாணர். புலவர் முற்றூட்டு பொதுமைப்படுத்தப்பட்ட திட்டமாகலாம் இது (142) வேத்தியல் எழுத்தும் நூல்களும் என்னும் இணைப்பில் அரசு சார்ந்து வளர்ந்த இலக்கிய வரலாறு ஆகும். சில அரசியற் கருத்துக்கள் என்னும் குறிப்புக்கள் இருபத்தொன்பதும் அரிய தொகுப்பு ஆகும். (154-156), பாவாணரின் வரலாற்றுப் புலமையை வெளிப்படுத்தும் நூல் இஃதாகும். 27. மண்ணில் விண் பாவாணரின் பன்முக அறிவாற்றல் திறங்களைப் பளிச்சிட்டுக் காட்டும் நூல் மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை என்பதாகும். நேசமணி பதிப்பகம் வழியாக 1978 இல் வெளிவந்த இந்நூல் 248 பக்கங்களைக் கொண்டது. விலை உருபா 12. இந்நூல் வெளியீட் டுக்கு 'நெய்வேலி உத.க. நேயர்கள்' பணக்கொடை புரிந்துளர். "தக்க அரசிருந்து செங்கோலாட்சி செய்யின் விண்ணுலக இன்பம் மண்ணுலகத்திலும் நுகர்தல் கூடும்” என்பது நூலாசிரியரின் முகவுரை, "கூட்டுடமையைப் பொதுவுடைமை என்று பலர் தவறாகக் கூறுவர். பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன் படுத்தி, ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமையாகும்” என்று இம்முக வுரையிலேயே குறிப்பிடுகிறார். எல்லாத் தொழிலர்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றதும் வகுப்பு வேற்றுமையைத் தோற்றுவிக்காததும், உடம்பியற் பண்பாட்டையும் உளவியற் பண்பாட்டையும் ஒருங்கே வளர்ப்பதும், இறைவழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/87&oldid=1431409" இலிருந்து மீள்விக்கப்பட்டது