பக்கம்:தேவநேயம் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 11 பாட்டை மறுக்காததும், தனியுடைமையை விலக்காததும், பகுத்தறி விற்கு முற்றும் ஒத்ததும் உயரியதுமான கூட்டுடமையாட்சி அல்லது வாழ்க்கை கி.மு, அல்லது கி.பி. முதல் நூற்றாண்டிலேயே திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவரால் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதுவே, இப்பொத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது” என்று இப்பகுதியிலேயே நூற்பிழிவைத் தந்துவிடுகிறார் பாவாணர். நூல் முன்னுரைப் பகுதியில் பண்டைத் தமிழக அரசு வரலாறு, பண்டைத் தமிழக ஆட்சி முறை, அரசின் பயன், அரசியல் வளர்ச்சி வரலாறு, உலக நாட்டு வகைகளும் அரசு வகைகளும், கூட்டுடமைத் தோற்றம், கூட்டுடமை வகைகள் பொதுவுடைமை என்னும் பெயர் பொருந்தாமை, கூட்டுடமையே அரசின் முதிர் நிலை, குடியரசியல்பு என்னும் பதின் உட்பிரிவுகள் இடம் பெற்றுள, (1-36) அரசியல் வளர்ச்சியில் கிரேக்க அரசு, உரோம அரசு, ஆங்கில நாட்டரசு, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அரசு, பிரெஞ்சு அரசு, சுவிட்சர்லாந்து அரசு, இரசிய அரசு என்னும் எழுவகை அரசுகளின் அமைவுகளையும் விளக்குகிறார். கூட்டுடமை வகைகளை, உடன்புரட்சிக் கூட்டுடமை, படிமுறைப் புரட்சிக் கூட்டுடமை, வள்ளுவர் கூட்டுடமை என மூன்றாகக் கூறி, வள்ளுவர் கூட்டுடமை எல்லார்க்கும், எக்காலத் திற்கும் ஏற்றதாகும் என்கிறார் (34) "ஒரு குடும்பத்தில் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊன் உடை உறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது” என்று கூட்டுடமையே குடியரசின் முதிர்நிலை என்பதில் சுட்டுகிறார். “செங்கோலாட்சியோடு கூடிய இரு கட்சி அரசே குடியரசிற்கு ஏற்றது” என்று பல்கட்சி, பல்குழுக்கேடுகளைக் கருதச் செய்கிறார் குடியரசியல்பு என்பதில். வள்ளுவர் கூட்டுடமை, தமிழ்நாட்டு அரசின் கடமை, தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை, நடுவணரசின் கடமை, உலகக் கூட்டரசு, முடிவுரை என ஆறு பகுதிகளைக் கொண்டது நூல். வள்ளுவர் கூட்டுடமை என்பதை ஒன்பது உட்டலைப்புக ளாக வகுத்து வரைந்துள்ளார் பாவாணர்; அவை; வள்ளுவர் கூட்டுடமை இயல்பு, வறுமையடையும் வகைகள், மக்கட்பண்பாடு, வள்ளுவர் கூட்டுடமையின் தனிச்சிறப்பு, கூட்டுடமையின் நன்மைகள், கூட்டுடமைப் பண்பாடு, மக்கட் பெருக்கம், மக்கட் பெருக்கத் தீமைகள், மக்கட்பெருக்க மட்டுப் படுத்தம் என்பவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/88&oldid=1431411" இலிருந்து மீள்விக்கப்பட்டது