பக்கம்:தேவநேயம் 1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் வள்ளுவர் கூட்டுடமை, எல்லார்க்கும் ஏற்றது. ஈகையாளர்க் கும் புதுப்புனைவாளர்க்கும் தமிழ்ப்புரவலர்க்கும் கல்வி வள்ளலர்க் கும் செல்வ வரம்பிடாதது மதத்தில் தலையிடாதது என்று அதன் தனித்தன்மைகளைத் திட்டப்படுத்தி நயனுறக் கூறுகிறார். கூட்டுடமையின் நன்மைகளாக அனைவர்க்கும் வேலைப் பேறு, இரப்போர் குடிவாணர்க்குத் தொல்லை தராமை, வாழ்க்கைக் கவலையின்மை, ஆசையடக்கம், ஆள்தர் அமைச்சர் அதிகாரிகள் முதலியோர் ஊழலுக்கிடமின்மை, கல்லாமை இல்லாமை, குலப் பிரிவினை நீக்கம், நாட்டமைதி, அரசுச் செலவுக் குறைவு, ஒழுக்க உயர்வு, உயிர்ப்பாதுகாப்பு, பொருட்சேதமின்மை, குடும்ப உணர்ச்சி, வாழ்நாள் நீடிப்பு, உலக ஒற்றுமைக்கும் உலகப் பொது ஆட்சிக்கும் வழிகோலல் எனப் பதினாறு பேறு கூறல் பாவாணரின் நுண்ணிய பார்வைக் கொடையாகும். (47-51) மக்கட்பெருக்கம் முதலான மூன்று உட்டலைப்பும் ஒருபொருள் பற்றியன. கடினமான நோய்க்குக் கடினமான மருந்தே வேண்டும் என்று துணிவு மிகப் பல கருத்துகளை வெளியிடுகிறார். அவற்றுள் கட்டாய மலடாக்கம் என்பதொன்று. மக்கட்பேறில் லாமை, துறவு என்பவற்றைப் பாராட்டிச் சிறப்புச் செய்தலோடு வேண்டும் உதவிப்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும் என்பது பின்பற்ற வேண்டிய இன்றியமையாமை உடையதாம். (65-69) எந்தாட்டு நலத்திற்கும் பொதுவாக அமையும் திட்டங்களைத் தமிழ் நாட்டரசின் கடமை என்னும் தலைப்பிலும், தமிழ்நாட்டு அரசுக்கென உள்ள வடமொழி, இந்தி வல்லாண்மைகளை ஒழித்தல் தமிழைப் பேணிவளர்த்தல், இருமொழிக் கொள்கை ஏற்றல் என்பவற்றைத் தமிழ்நாட்டரசின் தனிக் கடமை என்னும் தலைப்பிலும் பகுத்துக் கொள்கிறார். "போக்குவரத்து, தற்காப்பு, வெளிநாட்டுறவு, நடுத்தீர்ப்பு என்னும் நாற்பெருந்துறையில்தான் நடுவணரசிற்கு அதிகாரமுண்டு. ஏனைத் துறைகளில் எல்லாம் நாட்டுப் பணிக்கு நாட்டு மக்களே அமர்த்தப் பெற வேண்டும்” என ஆணை மொழி போல் அரசுக்கு உரைக்கிறார். (107) ஆங்கிலத்தை அகற்றல் ஆகாது என்றும், ஆற்றுநீர்ப் பாசனம் நடுவண் ஆட்சிக்கு உட்படல் வேண்டும் என்றும், வேட்பாளர் தகவு தகவின்மை இவை என்றும், வெளிநாட்டுறவு இத்தகைத்து என்றும் நடுவண் அரசின் கடமைப் பகுதியில் எடுத்துரைக்கிறார் பாவாணர். “இலங்கையின் இந்தியத் தூதாண்மைக் குழுத் தலைவர் இனப்பற்றுள்ள தமிழராகவே இருத்தல் வேண்டும்.” "ஒருநாட்டில் பன்னீராண்டு தொடர்ந்து குடியிருந்தவர்க் கெல்லாம் குடியுரிமை உரியதாகும். அவரை நாட்டை விட்டகற்று வது நாகரிக அரசிற்கு உரியதன்று”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/89&oldid=1431412" இலிருந்து மீள்விக்கப்பட்டது