பக்கம்:தேவநேயம் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 13 "கருநாடக அரசு புதிய அணை கட்டுவதை நடுவணரசு உடனே தடுத்தல் வேண்டும். அதற்கு அவ்வரசு இணங்காவிடின், பன்னாடு பாயும் இந்திய ஆறுகளை எல்லாம் தேசியப் படுத்திவிடல் வேண்டும்” என்று சுட்டுபவற்றைச் செவிக் கொள்ளா அரசுகள் வழியாக நேர்ந்துள்ள கேடுகளை எண்ணத்தொலையுமா? 1973 இலேயே பாவாணர் எழுதிய எழுத்துகள் இவை. உலகக் கூட்டரசின் இன்றியமையாமையை உரைக்கும் பாவாணர் அதன் நன்மைகளைப் பட்டியலிட்டுப் பதினாறு காட்டுகிறார். நிறைவில் “இத்தகைய விண்ணக இன்ப வாழ்வை மண்ணகத்தில் நிறுவுவதற்கு, உலக முதுநாடாகிய இந்தியாவே உலக முதுமொழியாகிய செந்தமிழைக் கொண்டு விரைந்து அடிகோல வேண்டும் ” என்று கூறி நூலை முடிவுரை, மக்கள் வாழ்த்து என்ப வற்றுடன் முடிக்கிறார். (248) சாதி ஒழிப்பு, குடும்பக் கட்டுப்பாடு, மது ஒழிப்பு, தீயோரைத் திருத்துதல், பல்வேறு நாட்டு அரசமைப்பு இன்னன இந்நூலில் ஆழமாகவும் அழுத்தமாகவும் கூறப்பட்டுள என்பது குறிப்பிடத்தக்கதாம். 28. முதல் தாய்மொழி முதல் தாய் மொழி அல்லது தமிழாக்க விளக்கம் என்னும் நூல் கழக வெளியீடு 631 ஆக வெளிவந்தது. முதல் பதிப்பு சனவரி 1953. ஆசிரியர் பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேயன் எம்.ஏ; உரிமை; D, அன்னபூரணம் என்பவை ஆசிரியர் பற்றியும் உரிமை பற்றியும் உள்ளவை. "என் முதல் தாய்மொழியை அச்சிடவேண்டும். அதன்பிறகு தான் எங்கள் பிரின்ஸிபாலுக்கு என் அறிவு வெளியாகும் என்று பாவாணர் கழக ஆட்சியாளர்க்கு எழுதிய அஞ்சலால் (14.8.1931) இந்நூல்மேல் பாவாணர் கொண்டிருந்த மதிப்பீடும் அப்பொழுதே எழுதியிருந்த அல்லது எழுதத் திட்டமிட்டிருந்த குறிப்பும் வெளிப்படும். | “இதனைத் ஆக்கித் தந்த மெய்ப்பொருள் காணும் பேரறிவு படைத்த புலவர் திரு. தேவநேயனார் ” என்பது பதிப்புரையில் பாவாணர் பற்றிய குறிப்பு. 'கணிதமும் அறிவியலும் எங்கனம் திட்டமும் துல்லியமு மான நூற் கலையோ, அங்ஙனமே மொழி நூலும்” என நூன் முகவுரையில் குறிப்பிடுகிறார் பாவாணர். மேலும், “மொழியானது இந்நாட்டில் பொதுவாய்க் கருதப் படுகிறபடி இறைவனாற் படைக்கப்பட்டது மன்று; இயற்கையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/90&oldid=1431413" இலிருந்து மீள்விக்கப்பட்டது