பக்கம்:தேவநேயம் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் உள்ளதுமன்று; மாந்தனால் ஆக்கப்பெற்றதே. ஆயின், ஒருவனால் மட்டுமன்று; கழிபல ஊழிகளாகக் கணக்கற்ற தலைமுறையாள ரால் சிறிது சிறிதாய் ஆக்கப் பெற்றதாகும்.” என்று மொழி தோன்றிய வகையை எடுத்துரைக்கிறார். "தமிழ் எங்ஙனம் ஒன்றன் சார்பின்றித் தானே தோன்றி வளர்ந்துள தென்பது, இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுளது” என்று நூல் இயங்கும் வகையையும் தெளிவிக்கிறார். பாவாணர் சேலங்கல்லூரியில் பணி செய்த காலம் அது. முகவுரையில் உள்ள நாள் 212.49 என்பது. வழக்கம் போல் பாவாணர் விரிவான முன்னுரை வரைந் துள்ளார். குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம், மக்கள் ஞாலத்திற் பரவிய வகை மொழி தோன்றிய வகை, தமிழ் முதல் தாய் மொழி என்பதற்குக் காரணங்கள், பெரும்பான்மொழிகள் தமிழை ஒவ்வாதிருத்தற்குக் காரணங்கள், மொழிகள் மாந்தன் அமைப்பே, மொழிவளர்ச்சி ஒரு திரிந்தமைவு, தமிழ் அல்லது தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டமே என்பதற்குக் காரணங்கள் என எண் வகையில் பகுத்து விரித்து எழுதுகிறார். ஒவ்வொன்றன் காரணங்களையும் எண்ணிட்டு வரிசைப்படுத்துகிறார். இனி நூலைக் காண்டம், படலம்., இயல், துறை என ஒன்றனுள் ஒன்றாகப் பகுத்துத் திட்டமுள்ள யாப்புறவில் அமைத் துள்ளார். காண்டங்கள் குறிப்பொலிக் காண்டம், சுட்டொலிக் காண்டம் என இரண்டே. முன்னது ஐம்படலங்களையும் பின்னதும் ஐம்படலங்களையும் உடையனவே. எனினும் பின்னதன் விரிவாக்கமே நூல் ஆகின்றது. பின்னதிலும் ஈகார ஆகாரச் சுட்டுப் படலங்களினும் ஊகாரச் சுட்டுப் படலம் ஒன்றே 95 விழுக்காடு விளக்கம் பெறுகிறது. குறிப்பொலிக் காண்டத்தில் உணர்வொலிப்படலம், ஒப்பொலிப்படலம், குறியொலிப்படலம், வாய்ச் செய்கை யொலிப்படலம், குழவி வளர்ப்பொலிப்படலம் என்பவை உள. இவ் வைவகை ஒலிகளுள் வாய்ச் செய்கையொலியும் அதனினும் ஒப்பொலிகளும் மொழிவளர்ச்சிக்குத் துணையாவதை அக்காண்ட நிறைவில் சுட்டுகிறார். "சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடங்களையும் முறையே சுட்டக்கூடிய ஒலிகள் ஆ.ஈ.ஊ என்னும் மூன்றாய்த்தான் இருக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/91&oldid=1431414" இலிருந்து மீள்விக்கப்பட்டது