பக்கம்:தேவநேயம் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் வாயை ஆவென்று விரிவாகத் திறந்து சேய்மையைச் சுட்டும் போது ஆகார ஒலியும், ஈயென்று பின்னோக்கி இழுத்துச் சேய்மைக் குப் பின்மையாகிய அண்மையைச் சுட்டும்போது ஈகார ஒலியும், ஊவென்று முன்னோக்கிக் குவித்து முன்மையைச் சுட்டும் போது ஊகாரவொலியும் பிறத்தல் காண்க" முச்சுட்டும் சுட்டும் மூவிடங் களையும் குறிக்கும் பாவாணர், "நெடிலின் குறுக்கம் குறிலும் குறிலின் நீட்டம் நெடிலும் ஆதலின் ஆஈ,an எனினும் அ இ உ எனினும் ஒன்றே . குறிலினும் நெடில் ஒலித்தற் கெளிதாதலானும், குழந்தைகள் குறில்களைப் பெரும்பாலும் நெடிலாகவே யொலித்தலானும், குழந்தை நிலையில் இருந்த முந்தியல் மாந்தன் வாயில் நெடில்களே முந்திப் பிறந்திருத்தல் வேண்டும் என்று அறுதியிடுகிறார். "மூவகைச் சுட்டுகளுள் சொற் பெருக்க வகையில் ஒன்றி னொன்று சிறந்திருத்தலின் ஊ, ஈ, ஆ முறையில் கூறப்படும்” எனத் திட்டப்படுத்துகிறார். முன்மையைக் குறிக்கும் ஊகாரச் சுட்டு வழியாகக் கருத்து விரிவாக்கத்தைக் கணக்கியல் போலவும் அறிவியல் போலவும் தெளிவாக விளக்குகிறார். முன்மைக் கருத்தினின்று முன்வருதலாகிய தோன்றற் கருத்தும், தோன்றற் கருத்தினின்று முற்படற் கருத்தும், முற்படற் கருத்தினின்று முற்செலவுக் கருத்தும் , முற்செலவுக் கருத்தினின்று நெருங்குதற் கருத்தும், நெருங்குதற் கருத்தினின்று தொடுதற் கருத்தும், தொடுதற் கருத்தினின்று கூடற் கருத்தும், கூடற் கருத்தினின்று வளைதற் கருத்தும் பிறக்கும் என்பதை இருதிணை யுயிரிகளைக் கொண்டே தெளிவிக்கிறார். கூடற் கருத்தினின்று பிறக்கும் வளைதற் கருத்தொடு துளைத்தற் கருத்துத் தோன்றுவதையும் காட்டுகிறார். துளைத்தல் என்பது குழித்தல், தோண்டுதல், துளையிடுதல், புகுதல், துருவுதல் ஆகிய ஐவகைக் கருத்துக்களைத் தழுவும் என்னும் பாவாணர், "தோன்றல் முதல் துருவல் வரையுள்ள கருத்துக்களெல்லாம் ஒரு சுழல் சக்கரமாதல் காண்க” என வரையறை செய்கிறார். ஊகாரச்சுட்டு வழியே தமிழமைப்புற்ற வகையைத் தெள்ளத் தெளியக் காட்டுதலாலும் அம்மொழியே உலகெலாம் பரவியது ஆகலாலும் நூற் பெயரை முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் என்கிறார். ஈகாரச்சுட்டு அண்மை, பின்மை, இழுத்தல் வழிப்பட்டதை யும், ஆகாரச் சுட்டு சேய்மை ஒன்றே குறித்து நிற்றலையும் மட்டிட்டுக் காட்டுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/92&oldid=1431415" இலிருந்து மீள்விக்கப்பட்டது