பக்கம்:தேவநேயம் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் நூற் பொருளைத் திரட்டாக்கி, "தமிழ் குமரிநாட்டில் பிறமொழிச் சார்பின்றித் தானே தோன்றி வளர்ந்த தொன்முது மொழி என்றும், அது உணர்வொலி, ஒப்பொலி, குறியொலி, வாய்ச் செய்கை ஒலி, குழவி வளர்ப்பொலி , சுட்டொலி என்னும் அறுவகை நிலைக்களத்தினின்றும் எழுந்த சொற்களின் தொகுதி என்றும், அந்நிலைக் களங்களுள் சுட்டொலி - அதனுள்ளும் முன்மைச் சுட்டு - மிகச் சிறந்ததென்றும், தமிழ்ச் சொற்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு ஊகாரச் சுட்டினின்றே தோன்றியவை யென்றும் அறிந்து கொள்க” என முடிவுரை கூறுகிறார். 29. வடமொழி வரலாறு பாவாணர் காட்டுப் பாடியில் வாழ்ந்த காலத்தில் நேசமணி பதிப்பகப் பெயரால் வெளிவந்த நூல் வடமொழி வரலாறு. ஆண்டு 1967. "வடமொழி வரலாற்றை எழுதப் பாவாணர் 1949ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டிருந்தார் என்பது "வடமொழி வரலாறும் தலைநாகரிகமும்” புகழ்வேண்டி எழுதுபவை அல்ல - தமிழை வடமொழியினின்று மீட்டற்கு எழுதுபவை” என்று கழக ஆட்சியாளர்க்கு எழுதிய கடிதத்தால் புலப்படும் (6.4.1949) 'வடமொழியினின்று தமிழை மீட்பதென் வாழ்க்கைக் குறிக்கோள். “தமிழை வடமொழியினின்று மீட்க வேண்டும் என்னும் குறிக்கோள் கொண்டே தான் கற்றாய்ந்தவன்” "தமிழே திரவிடத்தின் தாயும் ஆரியத்தின் மூலமும் என்னும் உண்மையை உலகறிய நாட்டற்கு வேண்டியவாறெல்லாம் என்னைத் தகுதிப்படுத்தி வருகின்றேன்.” என்றெல்லாம் எழுதும் பாவாணர் அதற்குரிய ஆவணமாகவே வடமொழி வரலாறு வரைகின்றார். வடமொழி வரலாறு, திருச்சி மாவட்டப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழுவின் செங்கைப் பகுதியர் உதவியால் வெளிவந்தது. நூல் 350 பக்கங்களை யுடையது . மொழியதிகாரம் இலக்கண அதிகாரம், இலக்கிய அதிகாரம், தமிழ்மறைப்பதிகாரம், முடிபதிகாரம் என ஐந்ததிகாரங்களைக் கொண்டது. முன்னுரை 54 பக்கங்களில் இயல்கின்றது. "இவ்வுலகில் இதுவரை நிகழ்ந்துள்ள பெரிய ஏமாற்றுக்களுள் தலைமையானது 'வடமொழி தேவமொழி' என்பதே” என்று முகவுரையில் சுட்டும் பாவாணர், "தமிழை வடமொழியினின்று மீட்டு மீணடும் அதை அரியணையில் அமர்த்தினாலன்றி, தமிழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/93&oldid=1431416" இலிருந்து மீள்விக்கப்பட்டது